புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 06, 2019)

அநாதி தீர்மானம்

2 பேதுரு 3:9

ஒருவரும் கெட்டுப்போ காமல் எல்லாரும் மனந் திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.


“ஏதோ, தேவனுடைய சித்தம் நிறைவேறட்டும்” அல்லது “இது என்னு டைய தலையெழுத்து” அல்லது “இது விதி”என மனிதர்கள் விரக் தியில் கூறுவதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். இப்படியாக அறி க்கை செய்துவிட்டு, எங்கள் கண்போன போக்கில் வாழ்ந்து பிதா வின் சித்தத்திற்கு எங்களை ஒப்புக் கொடுக்கின்றோம் என்பது ஏற்பு டையதல்ல. “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத் தின்படி செய்யவே நான் வானத்திலி ருந்திறங்கிவந்தேன்” என்று இயேசு கூறி னார். தம்மை சிலுவையிலே பலியாக ஒப்புக் கொடுத்த அந்த இராத்திரி யிலே, “என்னுடைய சித்தமல்ல, உம்மு டைய சித்தமே நிறைவேறட்டும்” என்று, வர இருந்த அவமானம், நிந்தை, பாடு கள், மரணம் யாவற்றையும் ஏற்றுக் கொள்ள இயேசு தம்முடைய வாழ்க் கையை பூரணமாக அர்ப்பணித்தார். பிதாவின் சித்தம் என்று கூறும் போது, ஊழியம் ஒன்று, என் வாழ்க்கை இன்னொன்று என்று பிரித்து வைக்க முடியாது. இயேசுவைப் போல, எங்களுடைய வாழ்க்கையை பூரணமாக தேவ சித்தத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். பாவஞ்செ ய்கிற ஆத்துமாவே சாகும்;. எந்த மனு~னும் தன் முயற்சியினால், அந்த நித்திய மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், பிதாவானவர் தம்முடைய மிகுந்த அன்பினாலே தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு வழியாக மீட்பை உண்டு பண் ணிணார். ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய வாழ்வை சுதந்த ரித்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்களைக் குறித்ததான பிதா வாகிய தேவனின் அநாதி தீர்மானம். இந்த தீர்மானத்திற்கு விரோ தமான எந்த கிரியையும் தேவனால் உண்டானது அல்ல. அதாவது ஒருவன் தன்; ஆத்துமாவை கெடுக்கும் கிரியைகளில் வாழ்ந்து கொண்டு (வெளியரங்கமான பாவங்கள் அல்லது இரகசிய பாவங் கள்), நான் தேவனுக்காக வாழ்கின்றேன், அவருக்காக கிரியைகளை நடப்பிக்கின்றேன் என்பானாகில், அதனால் அவனுக்கு எந்த பிரயோ ஜனமும் இல்லை. ஆகவே, நாங்கள் தேவனுக்கென்று பரிசுத்த வாழ்வு வாழ்வது இன்றியமையாதது.

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்முடைய அநாதி தீர்மானம் என்னில் நிறைவேறும்படியாய், தூய வாழ்வு வாழ, என்னை அர்ப்பணிக்கின்றேன். அனுதினமும் என்னை வழி நடத்திச் செல்வீராக! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எசேக்கியேல் 18:20-24