புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 05, 2019)

முதன்மையான நோக்கம்

மத்தேயு 12:50

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கி றான் என்றார்.


இயேசு இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே வாழ்ந்த மதத் தலை வர்களில் பலர்இ பாவிகள் அசுத்தமானவர்கள் என்று பல ஜனங்களை சமுதாயத்திலிருந்து தள்ளி வைத்தார்கள். ஆனால் கர்த்தராகிய இயே சுவோஇ ஒடுக்கப்பட்டுஇ இனி வாழ்வில்லை என்றிருந்த பாவிகளையே தேடிச் சென்றார். ஜனங்களில் பலர்இ பாவத்தில் வாழ்ந்து கொண்டிரு ந்தது உண்மைஇ ஆனால் அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அவர்களுக்கு வழிகாட்டிகள் இருக்கவில்லை. இயேசு தாமேஇ அவர்களை பாவக்கட்டுக்களிலி ருந்து விடுவிக்கும்படிக்கு அவர்கள் மத்தியிலே பல அற்புதங்களை செய்துஇ அசுத்த ஆவிகளை துரத்திஇ ஜனங்களு க்கு புதிய நம்பிக்கையை உண்டு பண்ணினார். ஆனால் அந்த நாட்களிலி ருந்த பல மதத்தலைவர்கள் இதனால் இயேசுவின் மேல் எரிச்சலடைந்தார்கள். இயேசுவைக் குறித்து பல பொய்யான குற்றச் சாட்டுக்களை பிணைத்தார்கள். இவைகளை கேள்விப்பட்டஇ அவருடைய இனத்தார்கள்இ இயேசு மதிமயங்கி இருக்கின்றார் என்று அவரை பிடித்துக் கொண்டு வீடு செல்ல வேண்டும் என்று தவறான எண்ணங் கொண்டார்கள்;. அவரு டைய சகோதரரும்இ தாயாரும் வந்துஇ ஜனங்கூட்டத்திற்கு வெளியே நின்றுஇ அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். (மாற்கு 3:21-31) இயேசு சொன்னார்: தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்இ எனக்குச் சகோதரியும்இ எனக்குத் தாயுமாய் இருக்கிறார்கள் என்றார். இந்த இடத்திலேஇ பிதாவாகிய தேவனின் சித்தம் செய்வது எவ்வளவு முக்கியமானது என இயேசு வலியுறுத்தி காண்பித்தார். எந்த தடை எங்கள் வாழ்வில் வந்தாலும்இ எங்களை நேசிக்கின்றவர் கூட எங்களை குறித்து தவறான எண்ணங் கொண்டாலும்இ எங்கள் வாழ்வில் பிதாவாகிய தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதே எங்களின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

பரலோக பிதாவே, உம்முடைய திருச்சித்தத்தை என் வாழ்வில் நடப்பிப்பதையே என் வாழ்வின் முதன்மையான நோக்கமாக கொண் டிருக்கும் உணர்வுள்ள இருதயத்தை எனக்குத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:16