புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 04, 2019)

கால்கள் சறுக்கும் வேளைகளில்...

சங்கீதம் 145:18

தம்மை நோக்கிக் கூப்பி டுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.


கர்த்தராகிய இயேசுவின் பிரதான சீஷனாகிய சீமோன் பேதுரு என்ப வரைக் குறித்து இன்று நாங்கள் பெருமிதமாக பேசிக் கொள்கின் றோம். அவர் தம்முடைய வாழ்க்கையை கர்த்தருடைய பணிக்காக அர்ப்பணித்திருந்தார். இயேசு இவரை தம்முடைய திருப்பணிக்காக அழைக்க முன், இவர் ஒரு சாதாரணமான தொழிலை செய்யும் மனி தனாகவே இருந்தார். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல், இயேசு வோடு மிகவும் ஐக்கியமாக ஊழியம் செய்து வந்தார். இயேசு செய்த பெரி தான அற்புதங்களை கண்ட மனிதன். இயேசுவின் நாமத்தில் அநேக அற்புத ங்களை செய்த மனிதன். ஆனால், அவருடைய வாழ்க்கையில் வந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில், தன்னு டைய எஜமானாகிய இயேசுவை, தன க்கு தெரியாது என்று ஒரு முறைய ல்ல, மூன்று முறை முற்றாக மறுதலி த்தார். பேதுரு இதை திட்டமிட்டு செய் யவில்லை. தன்னுடைய எஜமானனை கைது செய்துவிட்டார்கள் என்று சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பயம டைந்து இப்படியான துரோகமான செயலை செய்திருந்தார். திடகாத் திரமான மனிதனாக இருந்தபோதும், தன் எஜமானை மறுதலித்தேன் என மனம் கசந்து அழுதார். இவைகள் நடந்து ஏறத்தாழ 50 நாட்களுக்கு பின் இவரது வாழ்க்கை முற்றாக மாற்றப்பட்டது. மரண பரியந்தம் தன்னுடைய எஜமானனுக்கு உண்மையாக இருந்தார். எங்களுடைய வாழ்க்கையிலும், நாங்கள் துரோகிகள் என்று கருதப்படக்கூடிய நிலை ஏற்பட்டாலும், இனி என்ன செய்வது, இனி எப்படியும் வாழுவோம் அல்லது இப்படி மரித்துப்போவாம் என்று மதியீனமான காரியங்களை செய்துவிடக்கூடாது. உண்மையாக மனந்திரும்புகின்றவர்களுக்கு தேவன் சகாயம் செய்கின்றவர். இழந்து போன சமாதானத்தை இரட்டிப்பாக தர கிருபை பெருத்தவராக இரு க்கின்றார். நான் தகுதியற்ற காரியத்தை செய்தேன், என்று எங்க ளையே நாங்கள் புறக்கணித்துவிடாமல், தகுதியில்லாத என்னையும் நீர் நேசிக்கின்ற அன்புள்ள தெய்வம் என்ற விசுவாசத்தோடு, இயேசு அண்டை கிட்டிச் சேருங்கள். அவர் எங்கள் ஒவ்வொருவரையும் பெரி தான சாட்சியாக நிறுத்த வல்லவர்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இக்கட்டான சூழ்நிலைகளில் நான் உம்மை விட்டு ஓடிவிடாதபபடி, உண்மையுள்ள இருதயத்தோடு உம்மையே பற்றிக் கொண்டு வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 36:6