புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 01, 2019)

வளர்ச்சி

சங்கீதம் 1:2

கர்த்தருடைய வேதத் தில் பிரியமாயிருந்து, இர வும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயி ருக்கிற மனுஷன் பாக்கியவான்.


பாடசாலைக்கு செல்லும் எங்கள் பிள்ளைகள் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களில் அதிக புள்ளிகளை எடுக்கும் போது, பெற்றோர் அதை பெருமிதமாகப் பேசிக் கொள்வார்கள். ஆனால், ஒரு மாணவன் சுகாதாரக் கல்வியில் சிறந்து விளங்கும் போது, அதை ஒரு பொருட்டாக எண்ணிக் கொள்வதில்லை. சுகாதாரக் கல்வியை ஏன் சிறிய வயதிலிருந்தே மாணவர்க ளுக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள்? சுகமாக இருக்கும் மாணவர்கள் ஏன் சுகாதாரக் கல்வியை கற்க வேண்டும்? கற்பது மாத்திரம் அல்ல, அவர்கள் அதை தங்கள் வாழ்வில் அப்பியாசப்ப டுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் மிகவும் கரிசனையுள்ள வர்களாக இருக்கின்றார்கள். ஏனெனில் நோய் வருமுன் எங்களை பாதுகாக்க வேண்டும். ஒரு வேளை நோய் அறிகு றிகளை கண்டால், அதற்குரிய முன்ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எங்கள் வாழ்வில் அமரிக்கையான நாட்களை தேவன் அருளும் போது, அந்த நாட்களை நாங்கள் ஞானமாக பயன்படுத்த வேண்டும். தேவனைத் தேடுவதற்கு ஆபத்து நாட்களை எதிர்பார்த்து வாழக் கூடாது. வேர்விட்டு வளராத தாவரம், தண்ணீர் நிலைகளோடு தொடர்பு இல்லாததால், வறட்சி நாட்களில் காய்ந்து போய்விடும். அதே போலவே, தேவனை அறிகின்ற அறிவில் வளராமல் இருக்கும் மனிதர்களின் வாழ்வும், நெருக்கங்கள் அவர்களின் வாழ்க்கையை அழுத்தும் போது, பல சோதனைகளில் அகப்பட்டு, அவைகளினாலே பின்வாங்கிப் போய் விடுகின்றார்கள். தேவனுடைய பிரமாணங்களை கற்றுக் கொள்ளும் போது, அவைகள் முதலாவதாக எங்கள் இருதய த்திலே பதித்து வைக்க வேண்டும். தேவனை அறிகின்ற அறிவில் வளர்வதன் ஒரு அளவுகோலாக உங்கள் உள்ளான மனிதனில் ஏற்ப டும் மாற்றம் காணப்படுகின்றது. உதாரணமாக, கடந்த வருடம் வன்மம் பகை எரிச்சல் என் உள்ளத்தில் இருந்தது ஆனால் இப்போது என் உள்ளம் மாறிவிட்டது. இது கிறிஸ்துவுக்குள் நாங்கள் அடையும் ஒரு வளர்ச்சி, இது தேவனின் அழைப்பை அறியும் அறிவின் வளர்ச்சி. இப்படியாக நாங்கள் தேவ காரியங்களிலே, ஒவ்வொரு நாளும் நன்றாக வேர்விட்டு வளர வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய அநாதி தீர்மானம் என்னுடைய வாழ்வில் நிறைவேறும்படியாய், உம்மை அறிகின்ற அறிவில் நாள்தோறும் வளரும்படி எனக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:18

Category Tags: