புதிய நாளுக்குள்..

தியானம் (தை 31, 2019)

மேன்மையானதை நாடுவோம்

எபிரெயர் 13:14

நிலையான நகரம் நம க்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.


இந்த உலகிலே, தரமான வாழ்க்கை வாழ வேண்டும், நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று அநேகர் பிரயாசப்படுகின்றார்கள். நீதியாக செல்வத்தை பெருக்கினவர்களும், துன்மார்க்கத்தினால் செல்வப் பெரு க்கை அடைந்தவர்களும், தங்களுக்கென பிரத்தியேகமான வைத்தியர் களை கூட, வேலைக்கு அமர்த்துகின்றார்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு என்னத்தை உண்ண வேண் டும், எப்படி உடற்பயிற்சி செய்ய வேண் டும், எப்படி உறங்க வேண்டும் என்று பலர் கற்று அறிகின்றார்கள். நாம் உல கத்திலே ஆரோக்கியமாக வாழ வேண் டும் என்று விரும்புவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இந்த மறுவாழ்வுக் குரிய காரியங்களைவிட இந்த உலகத் திற்குரிய காரியங்களை மேன்மைப்புட த்துவது மனிதர்களின் மதியீனம். மனிதன் எப்படிப்பட்ட கிரியைகளை செய்தாலும், ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனு ~னுக்கும் அதிகாரமில்லை. மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகார மில்லை. உலக தோற்றமுதல், தோன்றிய பல சக்கரவர்த்திகள், பெரும் அதிகாரிகள், தேவனுக்கு எதிராக எழுந்து நின்றவர்கள், தேவனுக்காக வாழ்ந்தவர்கள் எல்லோருமே இந்த பூமியைவிட்டு கடந்து சென்று ள்ளார்கள். இந்த பூமியிலே பிறப்பவர்கள் ஒரு நாள் மரிக்க வேண்டும். அதற்கு நல்லவன், கெட்டவன், பரிசுத்தன் என்ற பாகுபாடு இல்லை. இதனால் இந்த பூமியில் வாழும் நாட்களில், எல்லோருக்கும் அப்ப டியே சம்பவிக்கின்றது என சில மனிதர்கள் துணிகரம் கொண்டு, உல் லாசமாய் வாழ்ந்து நாட்களை கழிப்போம் என கண்போன போக்கில் வாழ்கின்றார்கள். ஆனால் தேவனுக்கு பயந்து, அவர் வழிகளிலே வாழ்ந்து, அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவர்களின் ஆத்துமா, இரண்டாம் மரணமாகிய அக்கினிக் கடலிலே நித்திய மரணத்தை ருசிபார்ப்பதில்லை. இவர்கள் நித்திய வாழ்வை சுதந்தரித்து கொள் வார்கள். ஆதலால் தான், நாங்கள் உயிர் வாழும் நாட்களில், எங்கள் மரணத்தோடு முடிவடையும் இவ்வுலகத்திற்குரிய காரியங்களை நாடித் தேடாமல், நித்திய வாழ்வு தரும் பரலோகத்திற்குரியவைகளையே நாடித் தேடுகின்றோம். பிரியமானவர்களே, கிறிஸ்துவுக்குள் உங்கள் நற் கிரியைகளில் நீங்கள் சோர்ந்து போகாமல், இன்னும் அதிகமாக செய ற்படுங்கள்.

ஜெபம்:

பரலோக பிதாவே, இனி வரப்போகும் மேன்மையை உணர்ந்து, கிறிஸ்துவுக்குள் இன்னும் அதிகமாக நற்கனிகளை கொடுக்கும் வாழ்க்கையை வாழ எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 8:8