புதிய நாளுக்குள்..

தியானம் (தை 30, 2019)

தேசத்தின் அதிகாரங்கள்

ரோமர் 13:1

எந்த மனுஷனும் மேலா ன அதிகாரமுள்ளவர்க ளுக்குக் கீழ்ப்படியக்கட வன்; ஏனென்றால், தேவ னாலேயன்றி ஒரு அதி காரமுமில்லை; உண்டா யிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப் பட்டிருக்கிறது.


இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, ரோம அரசாங்க த்திற்கு வரி செலுத்துவது சரியா என்று சிலர் அவரை கேட்டார்கள். இராயனுக்குரியதை (ரோமரின் இராஜா) இராயனுக்கும் தேவனுக் குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். ஆகையால் யாவரு க்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்;. எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவ னுக்கு வரியையும், எவனுக்குத் தீர் வையைச் செலுத்தவேண்டியதோ அவ னுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். (ரோமர் 13:7). ராஜாவுக்குரியதை மட்டுமே ராஜாவு க்கு செலுத்த வேண்டும். தானியேல் என்பவன், அந்நிய தேசத்திலே ராஜ பணி செய்து வந்த போது, ஒரு சம யம், தேவனை வழிபட முடியாது, ராஜாவை மாத்திரம் வழிபட வேண் டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது, தானியேல், தேவனாகிய கர்த்தரை வழிபடுவதை நிறுத்தவி ல்லை. ஏனெனில் வழிபாடு ராஜாவுக்குரியது அல்ல, தேவனுக்குரியது. எனவே, தேவனை சார்ந்த விடயங்களை தவிர, மற்ற விடயங்களில் நாங்கள் அதிகாரங்களுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும். ஒரு அதிகாரி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, தனக்கும்; தன் சந்ததிக்கும் நன்மை உண்டாக பொருள் சேர்ப்பவனாக இருந்தால், அதை அவன் தன் சந்ததியின் அழிவுக்கென்றே சேர்த்து வைக்கின்றான். அதே நே ரத்திலே, அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்தி ற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். அதே போல, தேவனுடைய நியமத்திற்கு எதிரான கட்டளைகளை போடுகிற வனும், தனக்கு ஆக்கினை உண்டாகும்படி அப்படிச் செய்கின்றான். எனவே, தேவனுக்கு எதிர்த்து போடப்படும் கட்டளைகளுக்கு நாங்கள் உடன் பட்டவர்கள் அல்ல. மற்றும்படி, நாங்கள் தேசத்தின் சட்டத்திற்கு உடன்பட்டவர்களாக இருக்கின்றோம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, மேலாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதிகாரங்க ளுக்கு, கொடுக்க வேண்டிய கனத்தை கொடுத்து, கீழ்ப்படிந்தி ருக்க என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக் கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தானியேல் 6:1-11