புதிய நாளுக்குள்..

தியானம் (தை 29, 2019)

தேவ பணிக்காக ஜெபிப்போம்

1 தீமோத்தேயு 2:1

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென் னவெனில், எல்லா மனு ஷருக்காகவும் விண்ண ப்பங்களையும் ஜெபங்க ளையும் வேண்டுதல்க ளையும் ஸ்தோத்திரங்க ளையும் பண்ணவேண் டும்.;


ஊழியங்களுக்காக ஜெபிப்போம் என்று கூறும் போது, உங்கள் மன திலே தோன்றும் நினைவுகள் என்ன? பொதுவாக விசுவாசிகள் மத்தி யிலே தோன்றும் எண்ணக் கருத்துக்கள் சிலவற்றை பார்ப்போம்., நாங்கள் செல்லும் ஆலயம் வளரவேண்டும். எங்கள் சபையில் ஆத்து மாக்கள் பெருக வேண்டும். எங்கள் சபையின் கட்டிடங்கள் பெருக வேண் டும். நாங்கள் செய்யும் பலவிதமான ஊழியங்கள் வளர வேண்டும். எங்கள் சபையின் ஊழியங்கள் தேசிய மட்ட த்திற்கு, அல்லது சர்வ தேசமட்டத் திற்கு செல்லவேண்டும். அந்த விரு ப்பங்கள் யாவும், தேவனுடைய சித்த த்தை, உங்கள் வாழ்வில், இந்த பூமி யில் நிறைவேற்றுவதாக இருந்தால் நல்லது. நாங்கள் செல்லும் ஆலயத் திற்காக ஜெபிக்க வேண்டும். நிறுத்தி விடாமல், அயலிலே, பட்டணத்திலே நடக்கும் மற்றய தேவ ஊழியங்களு க்காகவும் ஜெபியுங்கள். குறைகளை மட்டும் கண்டு கொள்ளாமல், குறைகள் நிறைவாகும்படி ஜெபியுங்கள். முதலாவதாக, சபையூடாக உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அதிலே கருத்துள்ளவர்களாக இருக்க வேண் டும். அதே வேளையில், எங்களால் செய்யமுடியாத நற்கிரியைகளை, இன்னுமொருவர் செய்யும் போது, அவர்களுக்காக ஜெபியுங்கள். தேவ மனிதனாகிய பவுல் என்பவரை துன்பப்படுத்த மனதுள்ளவ ர்களாய், போட்டி மனப்பான்மையுடன், சுத்த மனதோடே இயேசு கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள் என்று அறிந்த போது, அவர் எரிச்சல் கொள்ளவில்லை, மாறாக, “வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோ~ப்படுகிறேன், இன்னமும் சந்தோ~ப்படுவேன்” என்று கூறினார். நாங்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிடும்படி அல்ல, ஒருவர் பாரத்தை ஒருவர் தாங்கி, இரட்சிப்ப டையாதவர்களுக்காக மட்டுமல்ல, எங்களோடுகூட தேவ பணிக்காக பிரயாசப்படும் யாவருக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த பூமியிலே உம்முடைய திருச்சித்தம் நிறைவேற்ற பிரயாசப்படும் யாவருக்காகவும் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும் என்ற உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:14-18