புதிய நாளுக்குள்..

தியானம் (தை 28, 2019)

மனத்திருப்தி

எரேமியா 31:25

நான் விடாய்த்த ஆத்து மாவைச் சம்பூரணமடை யப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்


நாளாந்தம் தங்களுடன் இடைப்படும் மனிதர்களின் நிலைகளை தங் கள் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிட்டு, மனிதர்களில் பலர் திருப்தி யடைவதுண்டு. இவர்களில் சிலர், தங்கள் வாழ்விலிருக்கும் செல்வ செழிப்பு மற்றும் செல்வாக்கினால் உண்டான உலக மேன்மையைக் குறித்து பெருமை அடைவதுண்டு. நாங்கள் அப்படிப்பட்ட மனிதர்க ளைப் போல இல்லாவிடினும், எங் களை அறியாமலே வேறு வழிகளில் எங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு திருப்தியடையும் சந்தர்ப்பங்கள் வாழ் க்கையில் உண்டாகி விடுகின்றது. அவ ற்றை ஆராய்ந்து பார்த்து, கர்த்தர் முன் னிலையில் எங்கள் பார்வையை செம் மைப்படுத்த வேண்டும். பொதுவாக, நற்கிரியைகளை செய்ய விருப்பமு ள்ள மனதுள்ளவர்கள், தங்கள் பொரு ளாதார சமுக நிலைமையை விட கீழ் நிலையில் இருக்கும் மனிதர் களை கண்டால், அவர்களுக்கு உதவும்படியாய் விரும்புகின்றார்கள்;;. ஆனால் தங்கள் பொருளாதார சமுக நிலையைவிட உயர்வானவர் களைக் காணும் போது, அவர்கள் மனநிலை வேறுபடுகின்றது. “ஐசுவ ரியம் உள்ளவர்கள்” என்ற தலைப்பில், வேதத்தில் காணும் சில பாத்திரங்களை குறித்து சிந்தித்து, அந்த மனிதர்களைக் குறித்த பல அபிப்பிராயங்ளை தங்கள் மனதிலே ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். பொருளாதாரம் மட்டுமல்ல, வேறுபிரிக்கப்பட்ட வாழ்வு என்ற தலைப்பிலும், தங்கள் நிலைகளை மேன்மை என்று நிச்சயிக்கின்றா ர்கள். மற்றவர்களுடைய வாழ்வோடு எங்கள் வாழ்வை ஒப்பிடுவதால் உண்டாகும் மனத்திருப்தி அநித்தியமானது. எங்கள் திருப்தியானது, மற்றவர்களின் நிலையை மையமாக கொண்டதாக இருக்கும் என்றால், மற்றவர்களின் நிலை மாறும்போது, எங்கள் திருப்தி நிலையும் மாற்ற மடையும். எங்கள் கருத்துக்களாலும், எங்கள் கிரியைகளாலும் எங் கள் மனம் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கின்றவனே தன் வாழ்வின் உண்மையான மனத் திருப்தியை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் கண்;டடைகின் றான். தேவனுடைய சித்தத்தை அவன் தன் வாழ்வில் நடப்பிப்ப தால், அவன் ஆத்துமா திருப்தியடைகின்றது.

ஜெபம்:

அன்பும் இரக்கமுள்ள பிதாவே, இந்த உலகத்திலுள்ளவைகளால் என் மனதை நான் தேற்றிக் கொள்ளாமல், ஜீவன் தரும் உம்முடைய திருவார்த்தைகளால் என்னத் தாங்கி வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 63:1-7