புதிய நாளுக்குள்..

தியானம் (தை 26, 2019)

ஈடு இணையில்லாத மகிமை

எபேசியர் 2:7

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்க ளிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.


ஆபிரகாம் என்னும் மனிதனை பற்றி இன்று நாங்கள் அதிகமாகவும், பெருமிதமாகவும் பேசிக் கொள்வோம். இன்று அவருடைய வாழ்க் கையை குறித்து சற்று ஆராய்ந்து சிந்தனை செய்வோம். தேவன் அவரை அழைத்த போது, ஆபிரகாமுக்கு சுமார் 75 வயதாக இருந்தது. அவருடைய மனைவியும் 65 வயதாகியும், அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. அந்த காலகட்டத்திலே, உலகிலே பல மனிதர்கள் இருந்தார்கள், சில நாடுகளிலே ராஜாக்கள் இருந்தார்கள். பல விசேஷித்த மனிதர்களும். செல்வந்தர்களும், அவர் இருந்த ஊரிலும், இந்த உலகிலும் இருந்திருப்பார்கள். ஆபிரகாமோ ஒரு சாதாரண மனிதனாக இருந்தார். பல ரும் அவர்களின் நிலையை கண்டு பரிதபித்திருப்பார்கள். அப்படிப்பட்ட மனிதனை இன்று நாங்கள் விசுவாசத் தின் தந்தை என்று பெருமிதமாக பேசிக் கொள்கின்றோம். கிறிஸ்து வுக்குள் நாங்கள் யாவரும் ஆபிரகாமின் சந்ததியாக மாற்றப்ப ட்டிருக்கின்றோம். தேவன் கொடுத்த வாக்கின் பிரகாரமாக, வானத்து நட்சத்திரங்களைப் போல அவருடைய சந்ததியை பலுகச் செய்திரு க்கின்றார். இன்று நீங்கள் யார்? நாட்டின் தலைவரா? அல்லது உல கத்திலே ஒரு பெயர்பெற்றவரா? பெரும் செல்வந்தரா? பிரிய மானவர்களே, தேவன் தம்முடைய கிரியையை நடப்பிப்பதற்கு இந்த உலகின் அளவு கோலை பயன்படுத்துவதில்லை. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிப திகளோடும் உட்காரப்பண்ணுகிறார். தன்னைத் தாழ்த்தி அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிய ஆயத்தமாயிருக்கும் மனிதர்களோடு அவர் தம்முடைய அதிசயமான கிரியைகளை நடப்பிக்க ஆயத்தமுள்ளவரா யிருக்கின்றார். அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ் துவுடனேகூட உயிர்ப்பித்தார்;. இந்த உலகின் அளவு கோலின்படி, நாங்கள் அற்பமானவர்களாக இருந்தாலும், இனி வரவிருக்கும் ஈடில்லாத மகிமையை, ஆபிரகாமைப் போல, உறுதியாய் விசுவாசியுங்கள். அதை நிச்சயமாக தேவன் எமக்கும் தருவார்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, இந்த உலக அளவுகோலின் படி நீர் என்னை பார்க்காமல், உம்முடைய திவ்விய சுபாவத்திற்கு பங்காளியாகும்படி அழைத்த மா தயவுக்காக உமக்கு நன்றி.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9