புதிய நாளுக்குள்..

தியானம் (தை 25, 2019)

ஒன்றித்து செயற்படுங்கள்

1 கொரிந்தியர் 12:17

சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?


ஒரு ஊரிலே வசித்து வந்த மனிதனுக்கு ஐந்து குமாரர்கள் இருந் தார்கள். ஐவரும், நன்றாக கற்று தேர்ச்சியடைந்தார்கள். மூத்தவன் மருத்துவராகவும்;, மற்றவர்கள் முறையே, பொறியியலாளராகவும், சட்ட த்தரணியாகவும், கணக்காளராகவும், ஆசிரியராகவும் வேலை பார்த்து வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களிடம் உள்ள படிப்பை யும் உத்தியோகத்தையும் குறித்து ஆலோசனை கேட்பவர்களுக்கு அவர வர் படித்த படிப்பே நல்லதென்றும், தாங்கள் பார்க்கும் உத்தியோகமே மேன் மையானது என்றும் சொல்லிக் கொள் வார்கள். ஆனால் ஒவ்வொருவரும் மற்றவர்களின் சேவையில் நேரடியா கவோ மறைமுகமாகவோ தங்கியிருப் பதை உணராதிருந்தார்கள். யாவரும் வைத் தியரானால், வைத்திய உபகர ணங்களை செய்வதற்கு பொறியியளாளர் இல்லாதிருப்பார்கள். யாவ ரும் ஆசிரியரானால், யார் கணக்கு வழக்குகளை சட்டப்படி செய்து, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவார்கள்? இதே போலவே எங்கள் குடும்பங்களும், சமூகமும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழ்கின்றோம். இவையாவும் தேவனுடைய திட்டத்திற்கு உட்பட்டிருக்கின்றது. குறிப்பாக தேவனுடைய ஊழியத்தை செய்யும் ஒவ்வொருவரும், கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக இருக்கின்றோம். ஒருவர் நன்றாக பாடி வாத்தியக் கருவிகளை வாசித்து துதி ஆராதனையை வழிநடத்துகின்றார். போதகர் நன்றாக பிரசங்கிக்கிறார். இப்படியாக தேவனுடைய ஜனங்களின் பக்திவிருத்திக்காக வரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, ஒரு சுவிசே~கர், சபை அவசிய மில்லை, போதகர் தேவையில்லை என்று கூறமுடியுமா? முடியாது. யாவரும் தற்போது சுவிசேஷகர்களானால், அடுத்த சந்ததியின் சுவிசேஷர்களாக இருக்கும் சிறார்கள், வாலிபர்களை, கர்த்தருக்குள் வளர் ந்து வரும்படி யார் வழிநடத்துவார்? குடும்ப, சமுக, நகர தேச மட்டத்திலும் இப்படிப்பட்ட பாகுபாடு எங்களுக்குள் இருக்கலாகாது. தேவனுடைய அனுக்கிரகங்களை பற்றி எதிர்த்து விமர்சிக்காமல், ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு, பெருமையடையாமல், ஒரு மனதோடு தேவ சித்தத்தை இந்த பூமியிலே நிறைவேற்றுவோம்.

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்முடைய சித்தப்படி நீர் பகிர்ந்து கொடு த்த வரங்களை ஆசீர்வாதமாக எண்ணி, ஒருமனதோடு ஒன்றிணைந்து உம்முடைய திருச்சித்தத்தை நிறைவேற்ற என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 12:12-18