புதிய நாளுக்குள்..

தியானம் (தை 23, 2019)

மனமகிழ்ச்சி தரும் வேதம்

சங்கீதம் 119:165

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.


தேவனோடு வாழும் வாழ்க்கையை குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்ததான உங்கள் அபிப்பிரயாயம் என்ன? பல கட்டளைகளை கைகொள்ள வேண்டும், இந்தக் காரியத்தை அப்படிச் செய்தால் போதகர் பேசுவார். இதை பார்த்தால் குற்றம். அதை உடுத்தினால் பாவம். இப்படியாக உங்கள் மேல் திணிக்கப்பட்டிருப்பவைகள் கட் டளைகள் என்று நினைத்து வாழ்கின் றீர்களா? அவை வாழ்க்கைக்கு பார மாக தோன்றுகின்றதா? அப்போஸ்த லனாகிய பவுல், கிறிஸ்துவுடனேகூடச் சிலு வையிலறையப்பட்டேன்; ஆயி னும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத் திருக்கிறார்; என்று கூறினார். மனமடி வடைந்து, சோகமான பாடலுடன் இதை அவர் கூறவில்லை. இயேசுவுக்காக எல்லாவற்றையும் ந~;டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி “ஆசையாய்த்” தொடருகிறேன். தேவனுடைய கற்ப னைகள் எங்கள் ஆன்மாவுக்கு அருமருந்து. எப்படி உங்கள் சரீரத்தில் புண் ஏற்படும் போது, வைத்தியரிடம் சென்று, தகுந்த மருந்தை எடுக்கும் போது, அந்த புண்ணானது முற்றிலும் மாறி, தேகம் ஆரோக்கியமடைகின்றதோ. அதைவிட மேலாக, மனதில் உருவாகும் புண்கள், கிலேசங்கள், கசப்புக்கள், தோல்விகள் யாவையும் அகற்றி, எங்கள் ஆன்மாவை ஆற்றி தேற்றும் வசனங்களே (கற்பனைகள், கட்டளைகள், பிரமாணங்கள், நீதி நியாயங்கள், சத்திய வழிகள்) தேவனுடைய வேதம். சத்திய வசனங்களினாலே நாங்கள் யாவரும் தேற்றப்படுகின்றோம். தேவனோடு வாழும் போது, பல சவால்கள், எதிர்ப்புக்கள், ஏளனங்கள் வரலாம். ஆனால், கிறிஸ்துவின் நிமித்தம் அவை எங்களுக்கு ஏற்படும் போது அவை எங்களுக்கு ஆனந்த பாக்கியமாக இருக்கின்றது. சத்திய வேதம் எப்போதும் எங்கள் மனமகிழ்சியாக இருக்க வேண்டும். எனவே, தேவனோடு வாழ்ந்து, தேவ சித்தத்தை நிறைவேற்றுவது, ஒரு சோகக் கதையல்ல, திணிக்கப்பட்டவைகள் கட்டளைகள் அல்ல, மாறாக, அவைகளினாலே நாம் நித்திய வாழ்வை அடைந்து கொள்கின்றோம்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, முடிவில்லாத வாழ்வை பெறும்படியாய் அழைத்தவரே, அதன் மேன்மையை உணர்ந்து மன நிறைவோடு உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:1-5