புதிய நாளுக்குள்..

தியானம் (தை 22, 2019)

உன் சிருஷ்டிகரை தேடு

பிரசங்கி 12:1

நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை;


கல்வி கற்பதில் மிகவும் ஆர்வமுள்ள சிறு பையன், தவறாமல் ஞாயிறு ஒய்வு நாள்பாடசாலைக்கு சென்று வந்தான். வாலிப பிராய த்திலே, உயர்கல்வி கற்க வேண்டும் என்று இன்னும் அதிக முயற்ச்சி செய்தான். அவ்வப்போது, சபை ஒன்று கூடுதலை விட்டுவிட ஆரம்பி த்தான். படிக்க வேண்டும் என நல்ல நோக்குடன் தானே, ஆலயத் திற்கு வரவில்லை என்று பெற்றோரும் பெரும் கவனம் எடுக்கவில்லை. இள மையிலே சீராக கற்க வேண்டும் என்று அவனை இன்னும் ஊக்குவித் தார்கள். இறுதி பரீட்சையிலே, அதி திறமைச் சித்தி பெற்று, விசே~ பல்க லைக்கழத்திற்கு அனுமதி பெற்றுக் கொண்டான். படிப்படியாக ஆலயம் செல்வதற்கே அவனுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. ஒரு நாள் அவனைச் சந்தித்த போதகர், தம்பி ஏன் இவ்வளவு க~;டப்பட்டு படி க்கின்றாய், எந்த இலக்கை நோக்கி ஓடுகின்றாய் என்று கேட்டார்? நன்றாக கற்று நல்லாக உழைத்து சந்தோ~மான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கூறினான். கல்வி கற்பதில் தவறில்லை, நன்றாக கற்றுக் கொள். ஆனால், நீ எவ்வளவு கற்றாலும், இயேசு இல்லாத வாழ்க்கையில் சந்தோ~ம் இருக்காது என்று தயவாய் கூறினார். நான் இயேசுவை மறுதலிக்கவில்லை போதகரே என்று மறுஉத்தரவு கூறினான். நீ இன்னும் அப்படிச் செய்யவில்லை, ஆனால், நீ எங்கிருந்தாலும், தீங்குநாள் வருமுன், உன் நடைகளை நீ இப்போது சீர்ப்படுத்தி, வாலிப வயதிலே கர்த்தரைத் தேடு. இல்லையென்றால் நீ பெற்றிருக்கும் சந்தோ~மான வாழ்க்கை உன்னை விட்டு சிறகடித்துப் பறந்து போய்விடும் என்றார். பிரியமானவர்களே, தேவனை அறிந்த பெற்றோர்கள் கூட, வாலிபத்திலே தானே படிக்க வேண்டும், வாலிபத் திலே தானே உடுத்த வேண்டும், வாலிபத்திலே தானே உல்லாசமாக வாழ வேண்டும் என்று தங்கள் பிள்ளைகளை சற்று திசை திரும்ப அனுமதிக்கின்றார்கள். ஆனால் வாலிபனே, காலம் கடந்து போகும் முன் உன்னை சிரு~;டித்தவரை தேடு என்று வேதம் கூறுகின்றது. இயேசுவை ஒரு புறம் வைத்து விட்டு தன் வாழ்க்கையில் சந்தோ ~மானவைகளைத் தேடுபவன், அத்திவாரம் இல்லாமல் வீடு கட்டுகி ன்ற மதியீனனுக்கு ஒப்பாகயிருக்கின்றான்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்து அறியும் தேவனே, என் வாழ்க்கை யின் எந்தக் கட்டத்திலும் உம்மைத் நாடித் தேடுவதை முதன்மையாக வைத்திருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:9