புதிய நாளுக்குள்..

தியானம் (தை 21, 2019)

தேவனுடைய ஜனங்கள்

1 பேதுரு 2:10

இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்;


ஒரு நல்ல தாயானவளின் எண்ணமும் ஏக்கமும் எப்போதும் தன் பிள் ளைகளை குறித்ததாகவே இருக்கும். பிள்ளைகள் வயது வந்து பெரி யவர்களாகி, திருமணம் செய்து, அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தா லும், அந்த தாயானவள் தன் பிள்ளைகளைக் குறித்த கரிசனையில் குறைந்து போவதில்லை. தன் வீட்டில் இருந்தால் என்ன, வேலை செய்தால் என்ன, வேறு பொழுது போக்கு காரியங்களில் ஈடுபட்டால் என்ன, தன் பிள்ளைகளின் நலனுக் காக, எப்போதும், எந்த வேளையும், தியாகம் செய்ய ஆயத்தமுள்ளவ ளாக இருப்பாள். என் கடமை முடி ந்தது, இப்போது என்னுடைய உல் லாச நேரம் அல்லது என்னுடைய தனிப்பட்ட நேரம் என்று ஒன்றையும் வைத்திருப்பதில்லை. நாங்கள் தேவனோடு வாழும் வாழ்க்கையும் இதற்கொத்ததாகவே இருக்க வேண்டும். ஒரு மனிதனுடைய வாழ்க் கையில் நாளாந்த நடபடிகள் என்ன? காலையில் எழுந்து, வேதத்தை தியானித்து, ஜெபம் செய்து, பின்பு வேலை செய்வதற்கோ அல்லது கல்வி கற்பதற்கோ கடந்து செல்கின்றான். காலை தியானத்துடன், தேவனைப்பற்றிய கடமை முடிந்தது என்று கூறி, மிகுதியான நேரம் தன்னுடையது, என் ஈ~;டப்படி காரியங்களை செய்வேன் என்பது கிறி ஸ்தவ வாழ்க்கை அல்ல. நல்ல தாயானவளுக்கு தன் பிள்ளையை குறித்த கரிசனை அவள் மனதில் எப்போதும் இருப்பது போல, எங் கள் உள்ளத்தில் தேவனை குறித்த நேசம் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எதிர் நோக்கும் சூழ்நிலைகளில், எங்கள் கண் போன போக்கில் தீர்வு காணமுடியாது. நான் இயேசுவின் பிள்ளை என்ற எண்ணம், இது எனக்கு தகுதியானதா? இதில் என் பரம பிதாவின் சித்தத்தை நான் எப்படி நிறைவேற்ற முடியும்? எப்படி என் வழியாக பிதாவாகிய தேவனின் நாமம் மகிமை அடைய முடியும் என்ற சிந்தனை எப்போதும் இருக்க வேண்டும். நான் காலை மாலை வேத தியானங்களை முடித்து விட்டேன், ஞாயிறு ஆராதனையில் பங் குபற்றி விட்டேன். உபவாச நாட்களும் முடிந்தது, இனி என் உல் லாசம் என்று, இயேசுவை எங்கள் வாழ்வின் ஒரு பகுதியில் மட்டும் வைத்து நாங்கள் வெற்றி வாழ்வு வாழமுடியாது. என் செயல்கள் எல்லாவற்றிலும் நான் இயேசுவின் பிள்ளை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

ஜெபம்:

பரலோக தந்தையே, இந்த உலகிலே, என் வாழ்க்கையின் நோக்கத்தை நான் உணர்ந்து கொள்ளும்படியாய், பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 3:26