புதிய நாளுக்குள்..

தியானம் (தை 20, 2019)

முடிவில்லாத வாழ்வை நோக்கி...

1 தீமோத்தேயு 6:12

விசுவாசத்தின் நல்ல போ ராட்டத்தைப் போராடு, நித் திய ஜீவனைப் பற்றிக் கொள்; அத ற்காகவே நீ அழைக்கப்பட்டாய்;


“ஒரு மனிதன் குறிப்பிட்ட காரணத்திற்காக தன் உயிரை தானே மாய் த்து கொண்டான்;”; என்ற செய்தியை கேட்கும் போது, காரணம் எது வாக இருந்தாலும், அவன் மதியீனமாக நடந்து கொண்டான் என்று மனிதர்கள் கூறிக் கொள்வார்கள். பூமியிலே மனிதனுடைய வாழ்நாட் கள் குறுகியதாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் ஒரு அழகான திட்டத்தை வைத்திருக்கின் றார். மனிதனுடைய அறிவு குறைவு ள்ளது ஆதலால் இதன்பின்பு இனி ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வருகி ன்றான். அந்த முடிவிலே, வாழ்க் கையை இயேசுவிடம் கொடுக்கும் போது அவர் ஒரு புதிய ஆரம்பத்தை ஏற்படுத்துகின்றார். இந்த பூமியிலே புதிய வாழ்வை கொடுக்கின்றார். புதிய இருதயத்தை கொடுக்கின்றார். குருடான மனக் கண்களை தெளிவுபடுத்தி விடுகின்றார். இந்த வழியை அறியாமல் தன்னை மாய்த்துக் கொள்பவனை மதியீனனைப் போல மாய்த்துக் கொண்டான் என்று சொல்லுவோம். இந்த வாழ் க்கை தற்காலிகமானது, யாவரும் ஒரு நாள் இந்த உலகைவிட்டு கட ந்து செல்ல வேண்டும். இப்படிப்பட்ட வாழ்வை வாழாமல் இந்த பூமி யிலே தங்கள் உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் மதியீனர்கள் என் றால், தேவன் வைத்திருக்கும் நித்திய வாழ்வை அசட்டை பண்ணி, அதை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல், துணிகரமாக தன்னை நித்திய மரணத்திற்கு ஒப்புக் கொடுப்பவனை என்ன சொல்வது? அல்லது இயேசு கொடுத்த இரட்சிப்பை பெற்று, நித்திய வாழ்வைப்பற்றி நன்கு அறிந்தவன், தன் வாழ்வில் நித்திய வாழ்வுக்குரிய கிரியைகளை நடத்தாமல், தன் ஆத்துமாவை கெடுக்கும் பாவச் செயல்களை விட் டுவிடாமல், ஆங்காங்கே தன் வாழ்வில் அவைகளை பற்றிக் கொண் டிருந்தால், அவன் எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவன்? தன்னை நித்திய மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தவனாய் தன் உயிரை சிறிது சிறிதாக கொன்று போடுகின்றவனாக இருக்கின்றான். பிரியமானவர் களே, ஆத்துமாவை கெடுக்கும் எல்லாவிதமான மாம்சத்தின் கிரியை களையும் விட்டுவிடுங்கள். நித்திய ஜீவனுக்கு ஈடானாது இந்த உலகில் ஏதும் இல்லை. அதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக பிதாவே, நீர் எங்களுக்காக ஏற்படுத்தியிருக்கும் நித்திய வாழ்வை (ஜீவனை) எந்த விதத்திலும் நான் அசட்டை பண்ணாதபடிக்கு, அதை ஆசையாய் பின் தொடர என்னை வழிநடத்துவீராக.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:3