புதிய நாளுக்குள்..

தியானம் (தை 19, 2019)

யாரிடம் செல்வோம்?

யோவான் 6:68

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத் தில் உண்டே.


பிதாவாகிய தேவன் கூறுபவைகளை கூறியபடியே செய்து முடிப்ப வன், பிதாவின் சித்தத்தை பூரணமாக தன் வாழ்வில் செய்கின்றவ னாக இருக்கின்றான். எங்களுடைய வாழ்வில், தேவ சித்தத்தை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தாலும், சில வேளைக ளிலே மனதில் கேள்விகள் தோன்றுவதுண்டு. மோசே என்னும் மனி தனை தேவன் அழைத்தபோது, அவனு டைய மனதிலே அநேக கேள்விக ளும் சந்தேகங்களும் இருந்தது. அவை கள் பெருமைக்குரியவைகள் அல்ல. அவன் தன்னை தாழ்த்தி தன் மனதிலு ள்ளவைகளை தேவனுக்கு தெரிய ப்படுத்தினான். தேவன்தாமே அவை யாவற்றிற்கும் பதிலளித்தார். பின்பு அவன் விசுவாசம் ஸ்திரப்படும்படியாய் பல அதிசயங்களைச் செய்தார். அதே போல நாங்களும், எங்கள் மனதிலுள்ள சந்தேகங்களை தேவனுடைய பாதத்திலே, தாழ்மையுடன், வைக்கும் போது, அவை யாவற்றையும் அவர் தெளிவு படுத்துவார். ஆனால் தேவன் கூறுவதை செய்தபின்பு, நாங்கள் எதிர்பார்க்கும் முடிவு வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. யோனா என்னும் தேவ மனிதன், நினிவே பட்டணத்தின் அக்கிரமங்களையும், அதனால் வர இருக்கும் அழிவையும் குறித்து முன்னறிவித்தான். தேவன் கூறி யபடியே செய்து முடித்தான். அதன் பின்பு, தான் உரைத்தபடி அழிவு வரவேண்டும் என்று காத்திருந்தான். ஆனால் தேவனோ, நினிவே பட்டணத்தாரின் மனந்திருப்புதலை கண்டு, வரவிருந்த அழிவை, அனு மதிக்காத போது, யோனா எரிச்சல் அடைதவனாய். தேவ சமுகத்தை விட்டு ஓடுகின்றவனாக இருந்தான். நாங்கள் அப்படி இருக்கலாகாது. இவைகளை விட்டு என்பாட்டிற்கு ஒதுங்கிவிடுவேன் என்று எண்ணங் கொள்ளக் கூடாது. தேவனுடைய சித்தத்தை செய்யாவிட்டால், வேறு எதைச் செய்வீர்கள்? தேவனை விட்டு யாரிடத்தில் போவீர்கள்? வேறு எங்கே நித்திய வாழ்வு உண்டு? தேவனிடத்தில் மட்டுமே உண்டு. நித்திய ஜீவனை அடைவதே எங்கள் பந்தயப் பொருள். தேவன் கூறுவதை செய்வோம். தேவன் கூறியவைகளின் முடிவை அவரே நிர்ணயிப்பார். வாக்களித்த நித்திய வாழ்வை எங்களுக்குத் தருவார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, உம்முடைய சித்தத்தை செய்வதிலிரு ந்து ஒதுங்கிப் போகும் எண்ணத்தை முற்றிலும் என்னை விட்டு அக ற்றி, நீர் சொன்னதை சொன்னபடி செய்ய கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 3:13-15