புதிய நாளுக்குள்..

தியானம் (தை 18, 2019)

என் விருப்பம் நடைபெறவில்லை...

நீதிமொழிகள் 4:26

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உன க்கு வேண்டாம்.


தாங்கள் நினைத்த பிரகாரமாக காரியங்கள் நடைபெறாதவிடத்து, மனி தர்கள் பல கடுமையான முடிவுகளை எடுத்துக் கொள்ளுகின்றார்கள். பரிசுத்த வேதாகமத்திலே, தாவீது ராஜாவின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த ஆலோசகனாகிய அகித்தோப்பேல் என்னும் மனிதன், தான் நினைத்தபடி காரியங்கள் கைகூடாதபடியால், தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டான். அதற்கொத்த தாக,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோ த்தும் தற்கொலை செய்து கொண்டான். முதலாவதாக, நாங்கள் அறிய வேண் டியது, உயிரை மாய்த்துக் கொள்வது, பிரச்சனைகளுக்கான தீர்வு அல்ல. கொதிக்கும் பானையிலிருந்து, எரியும் நெருப்புக்குள் பாய்வதற்கு ஒத்ததா கவே தங்கள் உயிரை மாய்கின்றவர்க ளின் நிலைமைகளும் இருக்கும். இந்த உலகத்தை விட்டு சென் றுவிட்டால் எங்கள் கணக்கு முடியப்போவதில்லை. மனிதர்கள் இன் னும் பல தீர்மானங்களை தங்கள் வாழ்வில் எடுத்துக் கொள்கின் றார்கள், அவற்றுள் சில: பிரிவினை. அதாவது, குடும்பப்பிரிவு, உற வுகள் நண்பர்களிடமிருந்து பிரிவு, வேலை செய்யும் இடத்தை மாற் றுதல், பாடசாலையை மாற்றுதல், வீடு, பட்டணம், மாகாணம், தேசம் போன்றவற்றிலிருந்து இடம் பெயருதல், மற்றும் வாக்குவாதங்கள், கலகலப்புக்கள், வன்முறைகள் போன்ற பல காரியங்களை செய்கி ன்றார்கள். இவைகளினாலே, எங்கள் எண்ணப்படி நடக்காத காரியங் களை மாற்றலாம் என்று நினைக்கின்றார்கள். பிரியமானவர்களே, இந்த உலகிலே நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், எல்லாம் உங்கள் எண் ணப்படியோ, அல்லது இன்னுமொருவரின் எண்ணப்படியோ நடக்கப் போவதில்லை. பெரும் ராஜ்யத்தின் அதிகாரிகள் கொஞ்சக் காலம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி, புல்லின் பூவைப் போல மறைந்து போகின்றார்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மாற்றம், தேவனோடு உங்களை கிட்டி சேர்த்தால் அந்த மாற்றம் நல்லது. பயங்கரமான வனவிலங்கு காடு மாறிவிட்டது ஆனால் அந்த விலங்கு மாறவில்லை என்பது போல நாங்கள் இருக்கக்கூடாது. கருப்பொருள் நாங்கள் தேவ சித்தத்தை நிறைவேற்றி நித்திய ஜீவனை பற்றிக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

சர்வல்லமையுள்ள தேவனே, காரியங்கள் என் விருப்பப்படி நடைபெறாமல் இருக்கும் போது, என் இஷ்;டப்படி முடிவுகளை எடுக்கா தபடிக்கு, உம்முடைய நேரத்திற்கு காத்திருக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 16:1