புதிய நாளுக்குள்..

தியானம் (தை 15, 2019)

இயேசு தரும் நித்திய சமாதானம்...

லூக்கா 7:48-50

உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது…, சமாதானத்தோடே போ என்றார்.


ஒரு சமயம், கர்த்தராகிய இயேசு தாமே, சீமோன் என்னும் பரிசே யனுடைய வீட்டிற்கு போஜனம் பண்ண சென்றிருந்தார். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ கண்ணீரோடு அவர் பாத த்தில் இருந்தாள். இயேசு தாமே, அநேகமாயிருந்த அவளுடைய பாவங்களை மன்னித்து, சமாதானத்தோடே போ என்று அவளை அனு ப்பிவிட்டார். இந்த சம்பவத்தை நீங் கள் லூக்கா ஏழாம் அதிகாரத்திலே வாசிக்கலாம். இந்த உலகிலே சமாதா னமான வாழ்க்கையை வாழ வேண் டும் என்னும் விருப்பம் எல்லா மனி ர்தகளுக்கும் உண்டு. நன்றாக கல்வி கற்க வேண்டும், பின்பு நல்ல வேலை யில் அமரவேண்டும், கை நிறைய உழைக்க வேண்டும், வசதிகளுடன் வாழ வேண்டும் என்று அதிகமாக பிரயாசப்படுகின்றார்கள். இதனால் நிம்மதி உண்டாகும் என நினைக்கின்றார்கள். இப்படியாக வசதியாக வாழும் மனிதர்களை காணும்போது, அயலவர்கள், நண்பர்கள், உறவினர்கள், இவன் நல்வாழ்வு வாழ்;கின்றான் என்று அங்கீகரிக்க லாம். ஆனால், உங்கள் உள்ளத்தில் உண்மையாக சமாதானம் இருக்கின்றதா இல்லையா என்பதை நீங்கள் தான் அறிந்திருக்கின் றீர்கள். சூழ்நிலைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், அதை சமாதானம் என்று சில மனிதர்கள் எண்ணுகின்றார்கள். அப்படி எண் ணுகின்றவர்கள், சூழ்நிலைகளை, தங்கள் அதிகாரத்தினாலும், செல்வ த்தினாலும், சமுதாய அந்தஸ்தினாலும், சில வேளைகளிலே வன்மு றைகளாலும் கட்டுப்படுத்துகின்றார்கள். இப்படியான இடத்தில் பாரப ட்சமும், அநீதியும், துன்மாரக்கமும் இருக்கும். நான் ஒரு பாவமும் செய்யாதவன், நல்ல குடும்பத்தில் பிறந்து, ஒழுக்கமாக வளர்க்க ப்பட்டேன், தீய பழக்கங்கள் என்னிடம் இல்லை என்று ஒருவன் சொல்வானாக இருந்தால் அவன் பொய்யன் என்று வேதம் கூறுகின்றது. மனிதன் தன்னுடைய சொந்த கிரியைகளினாலே, அவன் நாடும் நிம்மதியை அடைய முடியாது. அந்த நிம்மதியை பெற்றுக் கொள்ள பாவ மன்னிப்பு அவசியமானது. இயேசு வழியாக மட்டுமே பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள முடியும். தன்னை உண்மையாக தேடி வந்த எவரையும் புறம்பே தள்ளாத அன்புள்ள இயேசு அண்டை சேருங்கள்.

ஜெபம்:

சமாதனத்தின் தேவனே, இந்த உலகம் தரும் நிம்மதியை தேடி இளைப்படைந்து போகாமல், சமாதானக் காரணராகிய, உம்மை நாடி, உமது சமாதானத்தை பெற்றுக் கொள்ள அருள் செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:27