புதிய நாளுக்குள்..

தியானம் (தை 14, 2019)

எங்கள் வாயின் வார்த்தைகள்...

பிரசங்கி 5:2

தேவசமுகத்தில் நீ துணி கரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு;.


கடந்த சில ஆண்டுகளாக, சிலரின் பழிச்சொல்லிற்கு ஆளானேன். பல வியாகுலங்களையும், அவமானங்களையும் சகிக்க வேண்டியதாயிரு ந்தது. என்று தான் கடந்து சென்ற கரடுமுரடான பாதையைக்குறித்தும், அதிலிருந்து தேவன் எப்படி என்னை விடுவித்தார் என்றும் ஒரு தாயார் சாட்சி பகர்ந்தார். அந்த தாயார் கடந்து சென்ற க~;டமான பாதையை, ஆலயத்தின் வயதான போதகர் நன்கு அறிந்திருந்தார். ஆரா தனை முடிந்தபின், வயதான போத கர், அந்த தாயாரை அணுகி “மகளே! நீ பகிர்ந்து கொண்ட சாட்சி அதிச யமானது. ஆண்டவர் கொடுத்த விடு தலை உண்மையானது. ஆனால் பிதா வின் நாமம், உன்னால் மகிமையடை யாதபடிக்கு ஏதாவது காரியத்தை நீ மறைத்து வைத்தாயோ? நீ சும்மா இருக்க எல்லோரும் உன்னை துன்பப் படுத்தினது மெய்தானோ?” என்று கேட்டார். இல்லை போதகர் ஐயா அப்படி ஒன்றையும் மறைக்கவில்லை, யாருக்கும் ஏதும் கெடுதி செய்யவில்லை என்று கூறிவிட்டு, வீடு சென்றாள். அன்றிரவு அந்த தாயானவளுக்கு உறங்க முடியவில்லை. மற்றவர்கள் தன்னை துன் பப்படுத்தியது உண்மை, ஆனால் அதற்கு முன், அவர்களுடன் தான் பேசிய கடுமையான வார்த்தைகள் அவள் நினைவிற்கு வந்தது. அனு பவசாட்சியை பகரும் போது, என்னை ஒரு குற்றமும் செய்யாத நிர பராதி என்று மற்றவர்களுக்கு காண்பித்தது தவறு என்று உணர்ந்து கொண்டாள். பிரியமானவர்களே, எங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லா விபரங்களையும் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என்பது பொருள் அல்ல. அயலவர்கள், உறவினர், நண்பர்கள், உடன் சகோதரர்கள் எங்களுடன் மனத்தாங்கல் அடைவதற்கு, எங்கள் பேச்சு அல்லது கிரி யைகள் காரணமாக இருந்திருக்கலாம். அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவ சமுகத்திலே, பேசும்போது, நாங்கள் எங்களை தாழ்த்தி உண்மையை பேச வேண்டும். நாங்கள் பேசும் வார்த்தைகள் இன்னுமொருவரைப் பற்றிய தவறான அபிப்பிரயா யத்தை மற்றவர் களுக்கு கொடுக்கக் கூடாது. எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்கள் இருதயத்தின் நோக்கங்களை அறிந்திருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக தேவனே, மனம்பதறி உம்முடைய சமுகத்தில் துணிகரமாக பேசாமல், என்னை தாழ்த்தி உண்மையை பேசும்படியாய் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-4