புதிய நாளுக்குள்..

தியானம் (தை 11, 2019)

சோர்வான நேரங்களிலே...

மத்தேயு 26:41

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திரு ந்து ஜெபம்பண்ணுங்கள்


இன்றைக்கு மனம் சரியில்லை. மனக் குழப்பத்தோடு, அரைகுறையாக ஜெபிப்பதால் பிரயோஜனம் இல்லை, எனவே இன்று கொஞ்ச நேரம், தொலைக் காட்சியில் நாடகத்தைப் பார்ப்போம் என்று ஒரு தாயார் சொல்லிக் கொண்டார். இந்த கூற்றை கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கின்றது. ஆனால் இப்படியான சூழ்நிலைகளிலே இன்னும் அதிகமாக தேவ சமுகத்தை கிட்டிச் சேரவேண்டும். திருவசனத்தை கேட்கிறவர்களாக மட்டுமல்ல, அதன் படி செய்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும் என நேற்றய தினத்திலே தியானித்தோம். அதன்படியே, எங்கள் குழப்பங்களுக்கான தீர்வுகளையும் மன ச்சமானதானத்தையும் இயேசு எங்களு க்கு தருகின்றவராயிருக்கின்றார். குத் துச் சண்டை செய்து கொண்;டிருக்கும் ஒரு மனிதனுக்கு முகத்தில் இரண்டு அடிகள் விழுந்துவிட்டால், இனி என்ன, இரண்டு அடி விழுந்து விட்டது, அப்படியே விட்டுவிடுவோம் என்று எதிரிக்கு விட்டுக் கொடுப்பானாக இருந்தால், எதிரியானவன், அந்த மனிதன் நினைவிழந்து விழுந்து போகுமட்டும் குத்துக்களை முகத்தில் வீசிக் கொண்டிருப்பான். எனவே, வாழ்வில் வரும் சில பின்னடைவுகளை கண்டு, மனதும் மாசம்சமும் விரும்பினதை செய்ய இடங்கொடுக்காமல், உயிர் வாழும் வரை, நல்ல போர்ச் சேவகனைப் போல போராட வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளில், திருவசனம் கூறுவதைப் போல, நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லா வற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்ப டுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதா னம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். அரைகுறையான மனதை தேவன்தாமே பூரணப்படுத்துவார். உங்கள் வாழ்க்கையில் வரும் இன்ப துன்ப நாட்களிலே, உங்கள் உணர்வுகள் மாற்றடைவதால், பிசா சானவன், உங்களை வஞ்சிக்க எத்தனம் செய்வான். பெலவீனமான நேரங்களில், உங்கள் ஆசை இச்சைகளில் மாண்டு போகவேண்டும் என்பதே எதிரியின் நோக்கம். எனவே எதிரியாகிய பிசாசானவ னுக்கு மனதிலே இடங் கொடுக்காதபடி விழிப்புள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

பரலோக பிதாவே, என்னுடைய மனநிலைகள் மாறும் போது, ஆசை இச்சைகளுக்கு இடங்கொடுத்து, மேலும் சோர்ந்து போகாதபடிக்கு, விழிப்புள்ளவனா(ளா)க வாழ எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:17-18