புதிய நாளுக்குள்..

தியானம் (தை 10, 2019)

திருவசனத்தை கைக்கொள்வோம்

யாக்கோபு 1:22

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடி க்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத் திரமல்ல, அதின்படி செய் கிறவர்களாயும் இருங் கள்.


பட்டணத்திற்கு தொலைவிலே இருந்த கிராமம் ஒன்றில், ஒரு மனிதன் பெரும் பண்ணை ஒன்றை நடத்தி வந்தான். அந்த கிராமத்திற்கு அருகில் ஒரு காடு இருந்ததால், பொல்லாத வனவிலங்குகளால் வரும் மோசம் பெரிதாக இருந்தது. பண்ணையிலுள்ள ஆடு மாடுகளுக்கு மட்டுமல்ல, அங்கு வாழும் அவன் குடும்பத்திற்கும் பெரும் அச்சுறு த்தலாக இருந்தது. மற்றய பண்ணை உரிமையாளர்கள் போல, அவ னும் ஒரு வேட்டைத் துப்பாக்கியை கொள்வனவு செய்து வைத்திருந்தான். அதின் குழாய்களை துப்பரவாக்கி, அதை நன்றாக பராமரித்து வந்தான். ஆனாலும், பொல்லாத வனவிலங்கு கள், பண்ணையை தாக்கும் போது, அவன் உணர்ச்சிவசம் அடைந்து, என்ன செய்வதென்பது என்று தெரியா மல், அங்குமிங்குமாக ஓடி, சத்தமிட்டு குழப்பமடைந்தான். இவன் இப்படி யாக சத்தமிட்டு; குழப்பம் அடையும் நேரத்தில், அந்த பொல்லாத வனவில ங்குகள், ஆடு மாடுகளை ஒவ்வொ ன்றாக கொன்று, இழுத்துச் சென்று விடும். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள்! பண்;ணையில் வேட்டைத் துப்பாக்கியை வைத்து, சுத்தம் செய்து, நன்றாக பராமரிப்பதால், அவனுக்கு என்ன பலன்? ஒன்றுமில்லை! அதுபோல தேவனுடைய திரு வசனங்களை, வாசித்து, கற்று, கேட்டு, தேறினவன், அதை தன் அன்றாட வாழ்வில் உபயோகிக்காமல் இருந்;தால் என்ன பலன்? வேத வார்த்தைகள் எங்கே எப்படி கூறப்பட்டிருக்கின்றது என எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நாளாந்த வாழ்க்கையிலே சவால்கள் எங்களை எதிர்நோக்கி வரும் போது, திரு வசனத்தை மறந்து, மாம்சத்திலே செயல்ப்படுவோமாக இருந்தால் நாங்களும், பயங்கரமான வன விலங்குகள் தன் வீட்டை நாசம்பண்ணும்போது, கொடுக்கப்பட்ட வேட்டைத் துப்பாக்கியை பாவியாதிருந்த மனிதனுக்கு ஒப்பாக இருப்போம். தேவனுடைய திருவசனத்திலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, உம்முடைய வசனங்களை ஆர்வமாகபடிக்கும் ஆர்வத்தையும், கற்றவைகளை கைக்கொள்ளவும் உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக் கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:34