புதிய நாளுக்குள்..

தியானம் (தை 07, 2019)

பொறுமையாக இருங்கள்

பிரசங்கி 7:22

அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்கு தெரியுமே.


என் அயலில் வாழும் மனிதன் இன்ன பிரகாரமாக என்னைக் குறித்து அவதூறு பேசினான் என்று ஒரு மனிதன் அறிந்து கொண்டபோது, மனம் கலங்கி, அதை நியாயப்படுத்த பல கிரியைகளை நடப்பித்து, தன் மனதை இன்னும் புண்படுத்தி, தன் காலத்தை விரயப்படுத்தி னான். இந்த உலகிலே, பசியினால் ஆகாரம் இல்லை என்று துயரு ரும் ஒருசாராரும், சிகை அலங்காரம் செய்ய பூக்கள் வேண்ட வேண்டுமே என்று வருந்தும் இன்னுமொரு சாராரும் ஒரே தேசத்தில் வாழ்கின்றார்கள். உண்டு, குடித்து, நன்றாக உடுத்தி, மாளிகையிலே வாழ்பவர்கள், வாழ்க் கையில் பரவச த்தை நாடுகின்றார்கள். அற்பமான காரியங்களை கூட, பெரி துபடுத்தி, அவற்றை உலகச் செய்திகளாக மாற் றிவிடுகின்றார்கள். ஏனெனில் அவர்க ளுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை எப்படி பிரயோஜனப்படு த்துவது என் பதை அவர்கள் உணர்ந்து கொள்ளா ததினால், அநாவசியமான காரியங்களில், தங்கள் காலத்தை விரய ப்படுத்துகின்றார்கள். தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளின் வழி களிலே நிதானமாக வாழும் மனிதன், மற்றவர்கள் பேசும் சாரமற்ற வார்த்தைகளுக்கு செவி கொடுக்கமாட்டான். அயலவர்களோ, அல்லது நாங்கள் நெருங்கிப் பழகுகின்றவர்களோ, பேசும் எல்லா விட யங்களையும், உள்வாங்கி, அதை பெரும் சம்பவங்களாக மாற்றிவிடக் கூடாது. சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே. கவ னித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்பட வேண்டியதாகும். அதுமட்டுமல்ல, தேவனை அறியாத நாட்களிலும், தேவனை அறிந்த பின்பும் நாங்களும் மற்றவர்களை பற்றி அறிந்தோ அறியாமலோ பேசிய சந்தர்ப்பங்களை நினைத்துப் பாருங்கள். அந்நா ட்களில் பரலோகத்திலுள்ள தேவனும், இன்னும் பல மனிதர்களும் தங்கள் பொறுமையை காத்துக் கொண்டார்கள். ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை. எனவே, தேவனுடைய புத்திரர்கள் என்னும் பதவியைப் பெற்ற நாம், அநாவசியமான பேச்சுக்களை ஒரு பொருட்டாக எண்ணி, அதை பெரும் நாடகமாக மாற்றாமல், தேவனுடைய பாதத்தில் அவற்றை ஒப்புக் கொடுத்து, காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்.

ஜெபம்:

நீடிய சாந்தமுள்ள தேவனே, மற்றவர்கள் பேசும் அநாவசியமான எல்லா காரியங்களையும் கவனித்து, என் மனதை நானே இன்னும் வேத னைப்படுத்தாமல், பொறுமையை காத்துக் கொள்ள கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:19