புதிய நாளுக்குள்..

தியானம் (தை 06, 2019)

கண்ணோக்கி பார்க்கும் தேவன்

சங்கீதம் 102:20

தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிரு ந்து பூமியின் மேல் கண்ணோக்கமானார்.


ஒரு நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பல ஜனங்கள், தங்கள் சொந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து போகும்படியான நிலைக்கு நிர் பந்திக்கப்பட்டார்கள். வேறு ஊருக்கு செல்வதற்கு அனுமதி எடுப்பது மிகவும் கடினமான காலமாக இருந்தது. செல்வந்தர்களும் செல்வாக்கு உள்ளவர்களும், அனுமதிப் பத்திரங்கள் எடுக்கும் நிலையங்களிலே, தங்களுக்கு அறிமுகமான அதிகாரிக ளின் பெயர்களை சொன்னவுடனே, அவர்களுக்கு வேண்டிய சௌகரியங் கள் யாவும் வழங்கப்பட்டு, பாதுகா ப்பாக அவர்கள் செல்லவிருந்த ஊரு க்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால் ஏழைக் குடியானவனான மனி தன் என்ன செய்வான்? நாளாந்த உழை ப்பு இல்லை எனவே அவனிடம் பணம் இல்லை. செல்வதற்கு இடம் இல்லை. உலகத்திலே செல்வாக்குகள் எதுவும் இல்லை. அவன் உன்னதத்திலே வாசம் செய்யும் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, திக்கற்றவர்களுடைய ஜெப த்தை அலட்சியம்பண்ணா மல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரி ப்பார். கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலை க்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமி யின்மேல் கண்ணோக்கமாயிருக்கிறார். ஆம் பிரியமானவர்களே, இந்த உலகில் உள்ள எல்லா அதிகாரங்களும், துரைத்தனங்களுக்கும், நீதிம ன்றங்களுக்கும் மேலான, நிகரில்லா உன்னதமான தேவன் பரலோ கத்திலே இருக்கின்றார். அவர் உன்னதங்களிலே வாசம் செய்தாலும், சிறுமைப்பட்டவர்கள் மேல் கண்ணோக்கமாயுள்ளார். இந்த உலகிலே மனிதர்களின் உதவியை நாடுவதில் தவறு இல்லை. தேவன் மனித தயவுகளையும் ஏற்படுத்திக் கொடுகின்றவராயிருக்கின்றார். ஆனால் மனிதர்கள் மட்டுப்படுத்தப்பட்டவர்களும், அவர்கள் மனம் மாறிப் போகின்றவர்களும், அவர்களின் வாழ்க்கை புல்லின் பூவுக்கு ஒத்திரு க்கின்றதென்பதையும் மறந்து போய்விடாதிருங்கள். இந்த உலகில் எந்த செல்வாக்கும் இல்லை என்று கவலைப்படாதிருங்கள். உன்னத மானவர் வானங்களிலிருந்து பூமியின் மேல் கண்ணோக்கமாயுள்ளார்.

ஜெபம்:

நிகரில்லாத தேவனே, இந்த உலகத்தின் செல்வத்தையோ அல்லது செல்வாக்கையோ பற்றிக் கொள்ளாமல், எப்போதும் எவ்வே ளையும் உம்மை நோக்கி பார்க்கும் உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமுவேல் 2:8