புதிய நாளுக்குள்..

தியானம் (தை 04, 2019)

ஜெபம் எங்கள் பாக்கியம்

1 சாமுவேல் 16:7

மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.


ஜெபம் செய்யுங்கள் என்று கூறியவுடன், பொதுவாக மனிதர்கள் மன திலே, விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தேவனிடம் சமர்ப் பிப்பதையே கருத்தில் கொள்கின்றார்கள். விண்ணப்பங்களும் வேண் டுதல்களும் ஜெபத்தின் ஒருபகுதி. அரச சபையிலே, குற்றவாளியின் கூண்டில் இரந்து நிற்கும் ஏழைக் குடியானவனைப் போல, தேவனு டைய சமுகத்தில் பலர் தங்களை வருத்திக் கொள்கின்றார்கள். ஜெபம் என்று சொன்னால், இத்தனை படிகள் உண்டு, இன்ன பிரகாரமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், பல முன் ஏற்பாடுகளை செய்ய வேண் டும், பல பரிகாரங்களையும், பல நற் கிரியைகளையும் செய்து, அவைகளை ஒரு பொதியில் கட்டி, தேவனிடத்தி ற்கு செல்ல வேண்டும் என்று ஜெப த்தை ஒரு சிரமமான செயற்திட்டம் போல பலர் ஏற்படுத்திக் கொள்கின்றா ர்கள். அப்படியாக பெரும் நற்கிரியைகள் நிறைந்த பொதியுடன் பரிசேயன் ஒருவன் ஜெபிக்கச் சென்றான். தான் செய்த நற்கிரியை களை தேவ சமுகத்திலே தெரியப்படுத்தினான், பாவியான மனிதர்களை போல, தான் வாழவில்லை என்று பெருமிதமடைந்தான். ஆனால் அவன் தேவ சமுகத்திலிருந்து நீதிமானாக வீடு திரும்பவில்லை. அவ னுடைய ஜெபத்தை தேவன் கேட்கவில்லை. ஜெபத்தின் வழியாக நாங்கள் தேவனோடு இடைப்படுகின்றோம். ஜெப வேளையிலே, தேவனை துதித்து, பாடி, நன்றி செலுத்தி, மற்றவர்களுக்காக பரிந்து பேசி, விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் தேவனுக்கு தெரியப்படுத்துகின்றோம். தேவ சமுகத்திற்கு பயபக்தியுடன் செல்ல வேண்டும் என்பது உண்மை. ஆனால் எங்கள் நற்கிரியைகளின் பொதிகளால் தேவனை கவர்ந்து கொள்ளலாம் என்று எண்ணிவிடக்கூடாது. தாழ்மையுள்ள இருதயத்தோடு தேவ சமுகத்திற்கு செல்ல வேண்டும். அவருடைய சமுகத்திலே உண்மையை மனதார பேச வேண்டும். தேவனுடைய சமுகத்திற்கு செல்வது ஒரு கடினமான செயற்திட்டம் அல்ல. ஜெபம் என்பது எங்கள் தேவனுடைய ஈவு. எங்களைப் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனிடம் சேரும் ஆனந்த பாக்கியம்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, உம்முடன் இடைப்படும் படியாக நீர் ஏற்படுத்தியுள்ள இந்த ஆனந்த பாக்கியத்திற்காக உமக்கு நன்றி. அந்த பாக்கியத்தை உணர்ந்து கொள்ளும் இதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:6-13

Category Tags: