புதிய நாளுக்குள்..

தியானம் (தை 02, 2019)

எங்கள் பார்வை...

எபிரெயர் 3:1

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ள வர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக் கைபண்ணுகிற அப்போ ஸ்தலரும் பிரதான ஆசா ரியருமாயிருக்கிற கிறி ஸ்து இயேசுவைக் கவ னித்துப்பாருங்கள்;.


பாடசாiலைக்கு செல்லும் தனது பிள்ளை, செல்லும் நோக்கத்தை மறந்து, அநாவசியமற்ற, இதர காரியங்களில் தன் நாட்டத்தை செலுத்தியதால், அந்தப் பிள்ளையின் பெற்றோர், அதிருப்தியடைந் தார்கள். ஏனெனில், தங்கள் மகனின் பார்வை வேறு திசைக்கு திரும்பிய போது, அவன் பாடசாலைக்குச் செல்லும் நோக்கத்தை மற ந்து, பலவிதமாக நோவுகளை தனக் குத் தானே ஏற்படுத்திக் கொண்டான். இவ்வண்ணமாகவே எங்கள் பார்வை யும் கர்த்தர் இயேசுவை விட்டு திரு ம்பும் போது, எங்கள் பந்தயப் பொரு ளை நாங்கள் மறந்துவிடுவோம். ஒரு மனிதன் தன் வாழ்வில் ஏற்படும் பிரச் சனைகளை பெரிதுபடுத்தும் போது, அவன் சிந்தையெல்லாம் அந்தப் பிரச் சனையிலேயே இருக்கும். அந்த வேளையிலே, இயேசுவின் சாயலாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து போய்விடுவான். வேறு சிலர், தங்கள் பார்வையை மற்றவர்கள் மேல் வைத்துவிடுகின்றார்கள். மற்றவர்களின் வாழ்க்கையில் குறையை காண்பதிலோ அல்லது மற்றவர்கள் நீதி யாய் நடக்க வேண்டும் என்று அவர்களின் வாழ்க்கையின் மேல் நோக் கமாக இருக்கும் போது, அவர்கள், தங்கள் நோக்கத்தை மறந்து விடுகின்றார்கள். நாங்கள் வீட்டிலிருந்தாலும், வெளியிலிருந்தாலும், ஆலயத்திலிருந்தாலும், வேலையிலிருந்தாலும், எங்கள் பார்வை எங் கள் பரமன் இயேசுவின் மேல் இருக்க வேண்டும். அதாவது, அவ ரைப் போல, பிதாவாகிய தேவனின் சித்தத்தை செய்ய வேண்டும். எங்கள் மனக் கண்களை குருடுபடுத்தி, பார்வையை வேறு காரியங் களில் திருப்பி விடுவதே எங்கள் எதிரியாகிய பிசாசானவனின் நோக் கம். தேவன் எங்கள் வாழ்வில் ஒரு அழகான திட்டத்தை வைத்திரு க்கும் போது, அந்த திட்டத்திலிருந்து எங்கள் பார்வையை நாங்கள் விலக்கினால், வேண்டப்படாத விபரீதங்களை எங்கள் வாழ்க்கையில் நாங்கள் ஏற்படுத்திக் கொள்வோம். எனவே, இந்த ஆண்டில் இன்னும் அதிகமாக தேவனைக் கிட்டிச் சேருவோம். எங்கள் பார்வை தேவன் காட்டும் வழியிலிருப்பதாக.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, என்னுடைய பார்வை சிந்தையெ ல்லாம், உம்முடைய கற்பனைகளின் வழியிலே இருக்கும்படிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 119:133