புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 30, 2018)

நனறி சொல்ல தாமதம் ஏன்?

லூக்கா 17:15-16

அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமான தைக் கண்டு, திரும்பிவ ந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படு த்தி, அவருடைய பாத த்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனா யிருந்தான்.


விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி, சிறப்பாக விளையாடி, வெற் றிபெற்ற விளையாட்டு வீரன் ஒருவன். மைதானத்தைவிட்டு, விலகிப் போகும் முன்னே, எளிமையான தன்மேல் நம்பிக்கை வைத்து, சிறு வயதிலிருந்து, தன்னை பயிற்றுவித்த தனது பயிற்றுநரிடம் சென்று, கண்ணீரோடு நன்றி செலுத்தினான். சற்று இந்த சம்பவத்தை சிந் தித்துப் பாருங்கள். சிலர் தேவனிடம் முக்கிய விண்ணப்பத்திற்காக ஜெபம் செய்து, அந்த காரியத்தை பெற்றுக் கொண்டபின் அல்லது வெற்றி பெற்ற பின், அந்த வெற்றியின் முழு மேன்மை யும் தங்களுடையதாக்கிக் கொள்கின் றார்கள்;. நான் செய்து முடித்தேன், நான் ஜெயித்தேன் என்று சொந்த கிரி யைகளைக் குறித்து விளக்கமாக பேசிய பின், எங்கேயோ ஒர் இடத்தில் இயே சுவே நன்றி என்று கூறிக் கொள்வார் கள். கல்வியிலோ, விளையாட்டிலோ, வேறெந்த போட்டியிலோ அல்லது வாழ் க்கையின் சூழ்நிலையிலோ ஜெயம் பெற்றவர்கள், சில வேளைகளிலே, வானொலியில் அல்லது தொலைக்கா ட்சியின் கலந்துரையாடலில் பங்குபெற் றும் போதும். இயேசு இதை எனக்கு செய்தார் என்று வெளிப்படையாக கூறுவதற்கு தயங்கிக் கொள்கி ன்றார்கள். ஒரு சமயம், கர்த்தராகிய இயேசு, தம்மை தேடி வந்த 10 குஷ்டரோகமுள்ள மனு~ரை சுகமாக்கினார். அவர்களில் ஒருவன் யூத மார்க்கத்தின்படி தள்ளிவிடப்பட்ட மனுஷனாக இருந்தான். அவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத் தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்கு ப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்;. பல ஜனங்கள் முன்னினையில் அந்த அந்நிய மனு~னுடைய நன்றியறிதலை இயேசு மெச்சினார். நாங்களும் நன்மையை பெறும் போது, மனிதர்களுக்கும், தேவனுக்கும் நன்றி செலுத்த தாமதிக்கக் கூடாது. வெளியரங்கமாக தேவனுக்கு சாட்சி பகரவேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, உம்மிடத்தில் நன்மை பெறும் நான், தாமதமின்றி, தயக்கமின்றி, வெளியரங்கமாக உமக்கு சாட்சி பகரும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக் 17:11-19

Category Tags: