புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 29, 2018)

நன்மைகள் எத்தனை எத்தனையோ!

சங்கீதம் 33:12

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.


நாங்கள் வருட இறுதி நாட்களில் மட்டுமல்ல, எப்போதும் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது உண்மையான கூற்று. எனினும், இந்த நாட்களை, நாங்கள் இன்னும் அதிகமாக தேவ னுக்கென்று விசே~pப்பது நல்லது. உலகபோக்கிலே வாழும் தேவ னையறியாத மனிதர்கள் எப்படியாக இந்த நாட்களை செலவழிக்கின்றார்கள் என்பதை குறித்து விமர்சிப்பதில் எங்க ளுக்கு பலன் ஏதும் இல்லை. எங்கள் சூழ்நிலை எப்படியாக இருந்தாலும், விசேஷமாக இந்த நாட்களிலே நாங் கள் தேவனுக்குள் நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும். மற்றவர்களு டன் எங்கள் வாழ்க்கைத் தரத்தை ஒப் பிட்டு எங்களிடத்தில் என்ன இல்லை என்பதைக் குறித்து துக்கிக்காமல், எங் களிடம் இருப்பவைகளை குறித்து நன் றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனிடத்தில் ஏறெடுத்த சில விண்ணப்பங்களுக்கு இன்னும் நான் எதிர்பார்த்த பதில் வர வில்லை என்று சோர்ந்து போகாமல், எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் அழகாய் செய்து முடிக்கும் தேவன் எங்க ளுக்கு இருக்கின்றார் என்று நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும். அடுத்த வருடத்தில் நடக்க வேண்டிய காரியங்களையும், அவைகளை நடத்தி முடிக்க தேவையான நிர்வாகத்தையும் குறித்து மன அழுத்தம் கொள்ளாமல், இந்த ஆண்டில், தேவன் செய்த உப காரங்களை நினைத்து நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும். எங்கள் பாவங்களை போக்கும் படியாக, விண்ணகத்திலுள்ள மேன் மைகளை துறந்து, மண்ணகத்திலே எளிமையான கோலம் எடுத்து, எங் கள் பாவங்களை பரிகரிக்கும்படி, கடைசித் துளி இரத்தத்தையும் சிந் திய கர்த்தராகிய இயேசுவை நோக்கி பாருங்கள். நாங்கள் நித்திய வாழ்வு அடைய வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த பூவுலகிற்கு வந்தார். அப்படிப்பட்ட தெய்வத்தை கொண்டிக்கிற பாக்கியத்தை நினை த்து நன்றி செலுத்துங்கள். கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் என்னுடைய வாழ்வில் செய்து வருகின்ற நன்மைகளை உணர்ந்து கொண்டு, நன்றியறிதலுள்ளவனா(ளா)க வாழ, என் மனக் கண்களை தெளிவடையச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9

Category Tags: