புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 28, 2018)

நன்றி கூறுவோம்…

கொலோசெயர் 3:15

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்க டவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன் றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.


ஒரு மனிதனின் குடும்பம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அகப் பட்டிருக்கும் போது, அவனுடைய நண்பன் ஒருவன், தனக்கிருந்த பெலத்தின்படி, ஒரு சிறிய உதவியை செய்தான். அந்த நண்பன், அந்த உதவியை குறித்து பெருமை பாராட்டாமல், தன் நண்பனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவ வேண்டும் என்று, மனதார அந்த உத வியை செய்தான். பிற்பாடு அதை மற ந்து போனான். பல ஆண்டுகள் கடந் தும், அந்த உதவியை பெற்ற மனி தன், தன் நண்பன் செய்த உதவியை பற்றி அடிக்கடி பேசிக் கொள்வான். உலக மனிதர்களின் பார்வையிலே, அவன் நண்பன் செய்த உதவி அற்ப மாக இருந்த போதிலும், இந்த மனி தன், நன்றியுள்ளவனாகவே இருந் தான். சில வேளைகளிலே இக்கட்டான சூழ்நிலையில், உதவிகளை பெற்றவ ர்கள், காலங்கள் மாறும் போது, தங் கள் முன்னிலமையை சீக்கிரமாய் மற ந்து போய்விடுகின்றார்கள். “அவர்கள் என்ன பெரிதாக செய்தார்களா? ஒரு சின்ன உதவியைத் தானே செய்தார்கள். இது என்ன புது மையான காரியங்களா? உலகிலே எத்தனை பேர் இப்படி செய்கின் றார்கள்” என்று நன்றியற்ற வார்த்தைகளை பேசிக் கொள்வார்கள். அல்லது அவர்கள் தங்கள் கடமைகளைத் தானே செய்தார்கள் என்று கூறிக் கொள்வார்கள். தேவனின் ஒவ்வொரு கிருபையும், எங்கள் வாழ்க்கையில் பல வழிகளிலே வெளிப்படுத்தப்படுகின்றது. தந்தை, தாய், சகோதரர்கள், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், வாழ்க்கை யிலே இடைப்படும் மனிதர்கள், மற்றும் தேவனுடைய படைப்புக்கள் வழியாகவும் தேவ கிருபை கொடுக்கப்படுகின்றது. உங்களுக்கு உத விய அல்லது உதவும் மனிதர்களுக்கு நன்றியற்றவர்களாக இருந்து கொண்டு, தேவனை உண்மை மனதுடன் ஆராதிக்க முடியாது. எனவே யாராவது உங்களுக்கு பெரிதான நன்மையோ அல்லது சிறிதான நன்மையோ, செய்திருந்தால், அவற்றை தேவ சமுகத்திலே நினைந் தருளி, கிருபையை அருளிய தேவனுக்கும், கருவிகயாய் செயலாற் றிய மனிதர்களுக்கும் இந்நாட்களிலே, நன்றியறிதலு ள்ளவர்களாயிரு ங்கள்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, கடந்த காலங்களிலே உம்முடைய கிருபை வெளிப்படும்படியாய் நீர் கருவியாய் உபயோகித்த பாத்திரங்களுக்கும் நன்றியறிதலுள்ளவர்களாக வாழ என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 107:8-9

Category Tags: