புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 27, 2018)

பரலோக மேனி

பிரசங்கி 5:2

தேவன் வானத்திலிருக் கிறார்; நீ பூமியிலிருக்கி றாய், ஆதலால் உன் வார் த்தைகள் சுருக்கமாயிரு ப்பதாக.


தற்பொழுது, அழிந்து போகும் இந்த பூமிக்குரிய கூடாரமாகிய சரீர த்தை அணிந்திருக்கும் நாங்கள், மகிமையான பரலோக மேனியை தரித்துக் கொள்ளும்படியாய், மண்ணின் சாயலை களைந்து, விண்ண வர் இயேசுவின் சாயல் அடையும்படியாய் நாளுக்கு நாள் நாங்கள் மறுரூபமாக்கப்பட்டு வருகின்றோம். இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பான சாயலை அடைவதே எங்கள் நோக் கம். எனவே நாங்கள் எங்கள் வாழ்வை ஒப்பிட்டு பார்ப்பதற்கு ஒரு அளவு கோலை வைத்திருக்க வேண்டுமானால், அந்த அளவு கோல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகவே இருக்கின் றார். இந்த உலகிலே வாழும் மனிதர்கள், தங்களை, மற்றவர்களோடு ஒப்பி ட்டு மனத்திருப்தியடைகின்றார்கள். மற்றவனை போல நான் குறைவான வாழ்க்கை வாழாமல், அவனைவிட நன்றாக வாழ்கின்றேன் என்று சுயநீதியின் அளவுகோலை வைத்திருக்கின் றார்கள். இப்படியாகவே, ஒரு பரிசேனும் (சமுதாயத்தில் நன்மதிப்பு பெற்ற குழுவை சேர்ந்தவனும்), பாவியென்று கணிக்கப்பட்ட ஆய க்காரனும் (ரோமருக்கு வரி வசூலிப்பவர்களின் குழு) ஜெபிக்கும்ப டியாக சென்றார்கள். பரிசேயனின் கண்கள் ஆயக்காரன் மேல இருந்தது. அவன் தன் நற்கிரியைகளை குறித்து பெருமை பாராட்டி னான். ஆனால், ஆயக்காரனோ, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று சுருக்கமாக, கருத்துடன் கூறினான். அந்த ஆயக்காரனே, தேவ கிருபையை பெற்று வீடு திரும்பினான். தேவசமுகத்தில் நீ துணி கரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தை யையும் சொல்லாமலும் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் எங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டு மேட்டிமையடையாமல், இயேசுவை பின்பற்றி அவரைப் போல மாறவேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டு திருப்தி யடையாமல், எப்போதும், கர்த்தராகிய இயேசுவையே என் முன்வைத்து, நாளுக்கு நாள் மறுரூபமாகும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமு 15:22

Category Tags: