புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 25, 2018)

என்னையும் தேடி வந்தார்

யோவான் 3:17

உலகத்தை ஆக்கினை க்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவ தற்காகவே அவரை அனு ப்பினார்.


தீராத வியாதியுடன் இருந்த ஸ்திரி, சமுதாயத்தினால் துரோகி என்று கருதப்பட்ட சகேயு என்னும் மனிதன், அசுத்த ஆவிகளால் பிடிக்கப் பட்டு தனித்துவிடப்பட்ட மனிதன், மோக பாவத்தில் கையும் களவு மாக பிடிக்கப்பட்ட ஸ்திரி, தெருவிலே பிச்சை கேட்டுக் கொண்டிரு ந்த குருடனாகிய பர்த்திமேயு, சமுதாயத்தினாலும், மதத் தலைவர்களி னாலும் அங்கீகாரம் பெற்ற சவுல் என் னும் மனிதன், இப்படியாக பலதரப்ப ட்ட மனிதர்களை வெவ்வேறான சூழ்நி லைகளிலே, இயேசு சந்தித்தார். அவரை விசுவாசித்து, அவரை சந்தித்த யாவ ரும் விடுதலையடைந்தார்கள். அந்த அன்புள்ள தெய்வம் இயேசு ஒரு நாள் என்னையும் உங்களையும் தேடி வந் தார். பாவ இருளிலே, இந்த உலகத் தின் மாயையில் அழிந்து போகாமல், நித்திய வாழ்வை அடையும்படி உன்ன தமான அழைப்பைத் தந்தார். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட் டுப்போகாமல் நித்தியஜீவனை அடை யும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர் ந்தார். தம்மை அறியாத அந்நியர்கள் அழிந்து போகும்படியாக அல்ல, ஒருவரும் அழிந்து போகாதபடிக்கு, தம்மை ஒப்புக் கொடுத்தார். பர லோக மேன்மைகளை துறந்து, இந்த பூமியிலே பாலகனாக பிறந்தார். தரித்திரருக்குச் சுவிசே~த்தைப் பிரசங்கிக்கும்படி, இருதயம் நருங்கு ண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை யும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண் டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வரு~த் தைப் பிரசித்தப்படுத்தவும் இந்த உலகத்திற்கு வந்தார். தொல்லை, துயர், வறுமை, தீரா நோயினால், ஒடுக்கப்பட்டவர்கள், வழிதெரியா மல் தத்தளிக்கின்றார்கள். உலக ஐசுவரியத்தினால் நிறைந்திருப்போர், தாங்கள் நிறைவடைந்திருக்கின்றோம் என்னும் குருட்டாட்டத்திலே சிக் கியிருக்கின்றார்கள். யாவருக்கும் ஒரு நற்செய்தி! இயேசு அழைக் கின்றார்!

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, இந்த உலகத்தின் மாயைக்குள் சிக்கி மாண்டு போகாமல், திவ்விய சுபாவத்திற்கு பங்காளியாக என்னை அழைத்ததற்காக நன்றி. முடிவுபரியந்தம் வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 4:18-19

Category Tags: