புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 22, 2018)

தேவனுடைய நாள்!

பிரசங்கி 3:17

சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.


“பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது. நீதி ஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது” என்று பிரசங்கியின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். எல்லாம் சரியாகத்தான் நடக்கின்றது என மனிதர்கள் கூறிக் கொள்வார்கள் ஆனால் படைத்த தேவன் யாவற்றையும் அறிந்திருக் கின்றார். ஏழைகள், எளியவர்கள், வித வைகள், அநாதைகளை ஒடுக்கி அவர் களின் நீதியை புரட்ட வேண்டாம் என பரிசுத்த வேதாகமத்திலே பல இடங் களிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த உலகிலே தங்களை சன்மார்க்கர் (நல் வழிநடப்பவர்கள்) போல சில மனிதர்கள் காண்பித்துக் கொள்கின் றார்கள். உண்மை வழிநடப்பவர்கள் உட்காரும் ஆசனங்களிலே துன்மார் க்கர் அமர்ந்துவிடுவதால், அவர்கள் சன் மார்க்கர் ஆகிவிடுவதில்லை. ஆனா லும், இந்த உலகம் அப்படிப்பட்டவர்க ளையும் சன்மார்க்கர் என்று அழைக்கி ன்றது. எனவே, தேவன் உலகிலே சன்மாரக்;கர் என்று அழைக்கப்படுபவர்களையும் நியாயந்தீர்ப்பார். நீதி மன்றங்களிலும், நியாயஸ்தானங்களிலும் மட்டுமல்ல, தேவனுடைய நீதி நிறைவேற்றப்படும்படியாய் அழைக்கப்பட்ட எங்கள் வாழ்க்கை பெயரளவில் நல்வழி நடப்பவர்கள் போல நாங்கள் வாழக்கூடாது. “ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருவனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்த வனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக் கிறவர்களாயிருப்பீர்களல்லவா?” எனவே, தேவனுக்கு முன்பாக கறைதிறையற்றவர்களாக நிற்கும்படிக்கு, முதலாவதாக எங்கள் எண்ணங்களிலும், நோக்கங்களிலும், கிரியைகளிலும்; தேவனுக்கு ஏற்பு டையதாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, மனிதர்கள் முன்னிலே நீதியுள்ளவர்கள் என்று எண்ணப்படுவதை பார்க்கிலும், உம்முடைய வார்த்தையின்படி உத்தமனாய் வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:1-4

Category Tags: