புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 21, 2018)

சாட்சி பகருவோம்

மாற்கு 5:19

இயேசு: நீ உன் இனத்தா ரிடத்தில் உன் வீட்டிற்கு ப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்த வைகளையெல்லாம் அவ ர்களுக்கு அறிவியென்று சொன்னார்.


இயேசுவும் அவருடைய சீ~ர்களும், கதரேனருடைய நாட்டில் வந்தார் கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனு~ன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது. அவனைச் சங்கி லிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினா லும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப் போடுவான்; அவனையடக்க ஒருவ னாலும் கூடாதிருந்தது. அவன் எப் பொழுதும் இரவும் பகலும், மலைக ளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக் குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவ னுக்குள் அநேகம் பிசாசுகள் குடி கொண்டிருந்தது. இப்படியான பரிதா பமான நிலையிலே இவன் இருக்கும் போதே இவன் இயேசுவை சந்தி த்தான். அவனுக்குள் குடிகொண்டிருந்த பிசாசுகளை, இயேசுவானவர் துரத்தி, அவனுக்கு பூரண விடுதலையை கட்டளையிட்டார். பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிற தைக் கண்ட அந்த ஊரார் பயந்தார்கள். இன்று, எங்கள் நிலை எது வாக இருந்தாலும், இயேசு எங்களை நேசிக்கின்றவராய் இருக்கின் றார். பிசாசுகள் பிடித்திருந்தவன், இயேசுவோடே கூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக் கொண்டான். இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற் குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெ ல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். பாவ கட்டுகளால் வாழ்விழந்த நிலையிருக்கின்றவர்களுக்கு, இயேசு விடுதலை கொடுக் கின்றார். கர்த்தரிடத்தில் இரக்கம் பெற்றவர்கள், அந்த இரக்கத்தை குறித்த சாட்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இயேசு பிரபல்யம் அடைவதற்கு அவருக்கு பிரச்சாரம் தேவையி ல்லை. ஆனால், இந்த உலகிலே நம்பிக்கையற்று வாழ்பவர் களுக்கு நம்பிக்கை உண்டு என்பதை நாங்கள் சாட்சியாக அறிவிக்க வேண் டும்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, உம்மிடத்தில் இரக்கம் உண்டு, உம்மிடத்தில் விடுதலை உண்டு என்பதை இந்த உலகிலே, நம்பிக்கையற்று வாழ்வோ ருக்கு அறிவிக்கும்படிக்கு என்னை நடத்திச் செல்வீராக.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 32:7

Category Tags: