புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 20, 2018)

மெய் ஞானம் பரத்திலிருந்து வரும்

பிரசங்கி 9:16

ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண் ணப்பட்டு, அவன் வார்த் தைகள் கேட்கப்படாமற் போனாலும், பெலத்தைப் பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.


“ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளை த்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டி னான். அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. ஆகையால் ஏழை யின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற் போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.” இப்படி யாக, பிரசங்கியின் புத்தகத்திலே வாசி க்கின்றோம். சமுதாயத்தில், சபையில், சங்கத்தில் பெயர் பெற்றிருக்கும் மனி தர்களின் சிறிய செய்கைகளும், பெரி தாக பேசப்படும், ஆனால் சமுதாயத் தில், சபையில், சங்கத்திலிருக்கும் எளிமையானவர்களின் பெரிதான கிரி யைகளும் சிறிதாகவே எண்ணப்படுகின்றது. உடல் பெலம் மட்டுமல்ல, கல்வி, பணம், அந்தஸ்து, பதவி போன்றவற்றால் இந்த உலகில் மனிதர்கள் பெலமடைகின்றார்கள். இவைகளினால் மனிதர்களுக்கு மெய் ஞானம் கிடைப்பதில்லை. ஏனெனில், மெய் ஞானமானது பரத்தி லிருந்து பிதாவாகிய தேவனிடத்திலிருந்து அனுக்கிரகம் செய்யப்படுகி ன்றது. தமக்கு பயந்து அவர் வழிகளில நடக்கின்றவனுக்கு மெய் ஞானத்தை அவர் கொடுகின்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இந்த பூவுலகிலே எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். மனித குல த்தை பாவத்திலிருந்து விடுவிக்கும் பெரிதான மீட்பை சிலுவை மர ணத்தின் வழியான செய்து முடித்தார். ஆனால் அந்த நாட்களிலிரு ந்து, இந்த நாள்வரைக்கும்;, உலக அறிவு, அந்தஸ்து பெரு த்தவர்களுக்கு, இந்த மீட்பு, அறியாத புதிராகவே இருக்கின்றது. இந்த மெய்யான தேவ ஞானம், உலகத்தின் பலவான்கள் என்று எண்ணப்ப டுபவர்களுக்கு பைத்தியமாக தோன்றுகின்றது. ஆதலால், நீங்கள் தேவ னுக்கு பயந்து அவர் வழியில் நடக்கும் போது, உங்களை அற்பமான எண்ணுகின்றவர்களை குறித்து கவலையடையாதிருங்கள். அவர்களின் பெலத்தைவிட மெய் ஞானமே மேன்மையானது.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, மற்றவர்களின் வாழ்க்கையின் சமாதா னத்தைக் கெடுக்கும் வஞ்சகமான வார்த்தைகளை எந்த காரணத்தைக் கொண்டும் பேசாதபடிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா )க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 9:10

Category Tags: