புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 18, 2018)

நீடித்த ஆசீர்வாதத்தின் நாட்கள்...

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


இப்போது நடக்க வேண்டியதைப் பார்ப்போம், வேறு வழி தெரிய வில்லை. பின்பு தேவனோடு ஒப்புரவாக்கிக் கொள்ளலாம் என்ற மனநிலையோடு, மனிதர்கள், தங்கள் வாழ்வில் முக்கியமான முடி வுகளை எடுத்துக் கொள்கின்றார்கள். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் எடுக்கும் தீர்மானங்கள், எங்களை மட்டுமல்ல, எங்களுக்கு பின்வரும் பல சந்ததிகளை பாதிப்படையச் செய் கின்றது. நான் உனக்கு ஒரு குமா ரனை கொடுப்பேன் என்று ஆபிரகா மிற்கு தேவன் கூறியிருந்தார். அவன் வயது முதிர்ந்தவனாகவும், அவன் மனைவி சாராய் சரீரத்திலே பிள்ளை பெறுகின்ற சாத்தியம் இல்லாதிருந்த தாலும், மறுமனையாட்டி வழியாக குமாரன் பிறப்பான் என்று எண்ணி, ஆகார் என்னும் பெண்ணை தெரிந்து கொண்;டான். அவள் ஒரு ஆண்பிள்ளையை பெற்றான். இதுதான் தேவனுடைய வாக்குத்தத்தம் என்று அநேக வருடங்கள் எண்ணிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் பல ஆண்டுகளின் பின், தேவன், அவனுடைய மனைவியாக சாராள் வழியாக, வாக்குதத்தத்தின் குமா ரனாகிய ஈசாக்கை கொடுத்தார். தேவன் தாம் உரைத்ததை நிறை வேற்றினார். ஆனால், ஆபிரகாமின் சுய தீர்மானத்தினால் பிறந்த இஸ் மவேல், ஈசாக்குக்கு எதிரியானான். பல ஆயிரம் வருடங்கள் கழிந் தும், அவன் அன்று எடுத்த பிழையான தீர்மானம், இன்னும் பாதி ப்பை பலருக்கு உண்டு பண்ணுகின்றது. எனவே எங்கள் வாழ்க் கையில், தேவனை குறித்த விவகாரங்களை பின்பு, பார்ப்போம், இப்போது, இப்படியாக செய்வோம் என்ற எண்ணத்தை விட்டுவிட வேண்டும். எங்கள் சுயத்தில் எடுக்கும் முடிவுகள், சொற்ப கால த்திற்கு நன்மையைப் போல தோன்றும், பின்பு அதன் பின்விளை வுகள் தோன்ற ஆரம்பிக்கும். எனவே, வாழ்க்கையில், முக்கியமான காரியங்கள், தாமதித்தாலும், நீங்கள் சுயத்திலே அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காதிருங்கள். பொறுமையாக தேவனுடைய நேரத் திற்கு காத்திருந்து முடிவு எடுக்கும் போது, அதன் பலன் சந்ததி சந்ததியாக நன்மையை உண்டு பண்ணும். ஆகவே, தேவனுக்குரிய காரியங்களிலே சமரசம் செய்வதை முற்றாக விட்டுவிடுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, பின்பு தேவனோடு ஒப்புரவா கலாம் என்று துணிகரமாக தீர்மானங்களை என் வாழ்வில் எடுக்காத படிக்கு என்னை நீர் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 40:1-2

Category Tags: