புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 16, 2018)

பிள்ளைகளை ஊக்குவியுங்கள்

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.


பாடசாலையிலே ஆசிரியர் கொடுத்த ஒப்படைகளை (assignments) இன் னும் நான் முடிக்கவில்லை. பல பாடங்களை படிக்க வேண்டியிருப்பதால், பாடசாலை வேலைகளிலே பின்னடைவாக இருக்கின்றேன், எனவே இன்று ஞாயிறு ஆராதனைக்கு போகாமல் வீட்டிலிருந்து பாடசாலை வேலைகளை பார்க்கட் டுமா? என ஒரு பிள்ளை, தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு மறுமொழியாக, நீ பாடசாலை வேலைகளிலே பின்னடைவு அடைந்திருந்தால், உன க்கு இன்னும் சில நாட்கள் தரும்ப டியாக கேட்டு, ஆசிரியருக்கு ஒரு துண்டு தருகின்றேன். ஒரு வேளை அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், நீ ஞாயிறு ஆராதனையை தவிர்க்க முடியாது. சபையாக கூடி தேவனை தொழுது கொள்ளுவதை, எங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் எந்த சூழ்நிலையிலும் தவிர்த்துக் கொள்ளக் கூடாது என தந்தை கூறினார். பிரியமானவர்களே, சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களை தடைசெய்ய வேண்டாம் என இயேசு கூறிய வசனத்தை அறிந்திருக்கின்றோம். நாங்கள், எங்கள் பிள் ளைகள் தேவனண்டை சேர்வதற்கு தடையாக இருக்கக் கூடாது. தேவனை பயபக்தியுடன் சேவித்து, அவர் கற்பனைகளை கைகொள்வதே வாழ்க்கையின் சாராம்சம். தேவனை சேவித்து, அவர் கற்ப னைகளை கைகொள்ளுகின்றவன், பிதாவின் சித்தம் இன்னது என்று அறிந்து அதை நிறைவேற்றுவான். எனவே எங்கள் பிள்ளைகள் தேவனை பின்பற்றுவதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை செய்யக்கூடாது. பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் தேவனுக்கு முதலிடம் கொடுக்கும்படி, பெற்றோர்கள் அவர்களுக்கு எடுத்துக் காட்டான வாழ்க்கை வாழ வேண்டும். சபை கூடிவருவதற்கு முக்கிய த்துவம் கொடுத்தல் அதற்கு ஒரு உதாரணம். வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனுக்கே முதலிடம் என்பதை சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு, செயல் உதாரணங்கள் வழியாக கற்றுக் கொடுக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே, அவர்கள் தேவனுடைய சித்தத்தை செய்வதன் முக்கியத்துவத்தை உணரும்படியாய் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, ஆரம்பத்திலிருந்தே, உம்மை சேவிப்பதன் மேன்மையை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்படியான தெளிவான சிந்தையை எனக்குத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 10:13-15

Category Tags: