புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 15, 2018)

செம்மையான இருதயம்

பிரசங்கி 7:29

இதோ தேவன் மனுஷனைச் செம்மையானவனாய் உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக் கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.


பரிசுத்த சந்ததியை உருவாக்கும்படியாக, தேவன் தாமே, ஆணும் பெண் ணுமாக மனிதர்களை உண்டாக்கினார். அவர்களை குறைவற்றவர்க ளாக உருவாக்கி, சுயாதீனத்தைக் கொடுத்தார். மனிதர்களோ, தேவன் கொடுத்த சுயாதீனத்தை தன் துர்குணத்திற்கு மூடலாக பயன்படுத்தி வருகின்றான். பாவம் மனிதர்களிடத்தில் உண்டான போது, அதை பரி கரிக்கும்படியான நேர்வழியை தேவன் உண்டுபண்ணினார். ஆனால், மனிதர் களோ, தங்களுடைய இஷ்டப்படி, குறு க்கு வழிகளை உண்டாக்கிக் கொள்கி ன்றார்கள். மனிதர்கள் தவறும் போது, அதை சரி செய்வதற்குரிய வழியை தேவன் போதித்திருக்க, மனிதர்களோ, அதை சரிசெய்வதற்கு பதிலாக, செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கான உபாய தந்திரங்களை தெரிந்து கொள் கின்றார்கள். பொய் சொல்லாதிருப்பா யாக என்பது தேவன் கொடுத்த கட் டளை. அந்த கட்டளையை கைக்கொ ள்ளுவதால், மனிதனுக்கு வரும் நன்மை கள் அதிகம். அந்த கட்டளையை ஒரு மனிதன் கைக்கொள்ளாமல் போனால், அதனால் தேவனுக்கு எந்த நட்டமும் இல்லை. ஆனால், பொய் பேசும் மனிதன், ஈற்றிலே தன் வாழ்வை அழித்துக் கொள்வான். ஒருவன் பொய் பேசிய பின்பு, தான் செய்த குற்றத்தை உணரும் போது, அதைவிட்டு மனந்திரு ம்புவதற்கு பதிலாக, சாட்டுப்போக்குகளையும், தான் பொய் சொல் லியதின் காரணத்தையும் நியாயப்படுத்த முயலும் போது, தான் தற் காலிகமாக தப்பித்து கொள்வதற்கு வஞ்சகமாக திட்டங்களை போடு கின்ற மனிதனாக இருக்கின்றான். தேவன் எங்களுக்கு தந்த செம்மை யான இருதயம், எந்த விதத்திலாவது மாசுபடுத்தப்பட்டிருந்தால், எங் கள் சுய பெலத்தினால், அவற்றை மறைக்க முற்படாமல், தேவனிட த்தில் சேருங்கள். இருதயத்தை உண்டாக்கியவர், அதை மறுபடியும் சீர்ப்படுத்த இரக்கமுள்ளவராக இருக்கின்றார். உபாய தந்திரங்கள், அதை கைகொள்ளுகின்றவனை, கண்ணியிலே அகப்படச் செய்யும். எனவே, செம்மையான இருதயத்தோடு, தேவனை சேவிப்போம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, என் சுயபலத்தை நம்பி, என் அறிவுக்கெட்டியபடி உபாயதந்திரங்களை தெரிந்து கொள்ளாமல், இயேசு காட்டிய வழியில் செல்ல என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - நீதி 3:5-6

Category Tags: