புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 14, 2018)

தேவனைத் துதியுங்கள்

சங்கீதம் 148:11-12

பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே, வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.


இந்த உலகத்திலே மனிதன் வாழும் வாழ்க்கை பாலைவனத்திலே பிர யாணப்படுவதற்கு ஒத்திருக்கின்றது. அந்த பிரயாணத்தை, நான் என் னுடைய பெலத்தினாலே ஓடி முடிப்பேன் என்று நினைப்பது மதி யீனம். நாங்கள் தனித்தவர்களாக விடாய்த்துப் போகாதபடிக்கு, எங் களை நன்மையான பாதையில் நடத்த தேற்றரவாளனானிய பரிசுத்த ஆவியானவர் எங்களை வழிநடத்தி செல்ல ஆயத்தமுள்ளவராக இருக்கின் றார். தேவனோடு நடப்பதற்கு வயதெ ல்லை இல்லை. சில வேளைகளிலே, முதியவர்கள், இந்தத் தியானக் குறிப் புகளை வாசிக்கும் போது, நான் என் னுடைய காலத்தை விரயப்படுத்தி விட் டேன் என மனச் சோர்வடையலாம். இயே சுவோடு நடக்காத காலங்கள் யாவும் விரயம் என்பது உண்மை. ஆனால், இப்போது நீங்கள் எந்த வய தாக இருந்தாலும், இயேசுவோடு நட க்க ஆரம்பியுங்கள். அநியாயமாக போன நாட்களை குறித்து துக்கிக்கா மல், கையிலிருக்கும் நாட்களை ஆதா யப்படுத்திக் கொள்ளுங்கள். வாலிபர்கள், தங்கள் வாலிப வயதில், சிருஷ்டித்த கர்த்தரை நினைக்க வேண்டும். அதாவது, தங்கள் வழி களில் இருக்கும் அசுத்தங்களை தேவனுடைய வார்த்தையினால் சுத் தம் செய்ய வேண்டும். எந்த வயதுடையவர்களாக இருந்தாலும், தேவனை முழு உள்ளத்தோடு துதிப்பதே மனிதர்களுக்கு நன்மை யானது. பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமி யிலுள்ள சகல நியாயாதிபதிகளே, வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். என்று சங் கீதப் புத்தகத்திலே வாசிக்கின்றோம். தேவனை மனதார துதிப்பவர்கள் மத்தியிலே அவருடைய பரிசுத்த பிரசன்னம் இருக்கும். தேவன் அவர் கள் மத்தியிலே அசைவாடுவார். அவர் எங்களோடு கூட வரும்போது, நாங்கள் ஒன்றையும் குறித்து கலங்கத் தேவையில்லை. நாங்கள் சென் றடைய வேண்டிய இடம் (பரலோகம்) அவருடய வீடு. அவர் எங்களை சுகமாய் நடத்திச் செல்வார்.

ஜெபம்:

பரலோக பிதாவே, இந்த வனாந்திர வாழ்க்கையை ஜெயங் கொள்ளும்படி நீர் எங்களுக்கு தந்த பரிசுத்த ஆவியானவரின் வழியில் நடக்க எங்களுக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 33:1

Category Tags: