புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 12, 2018)

பாக்கியம் பெற்ற மனிதர்கள்

சங்கீதம் 33:12

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது


பரிசுத்த வேதாகமத்திலே, இந்தப் பூமியையும் அதிலுள்ளவைக ளையும், மனிதர்களுடைய கிரியைகளையும் குறித்து, எழுத ப்பட்டிருக்கும் சில வாக்கியங்களை இன்று ஆராய்ந்து பார்ப்போம். “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திரு க்கிறது விருதா.” “இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை.” “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” “அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன் றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவ னாலே எல்லாமாகும்.” “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிக ளும் கர்த்தருடையது.” “ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.” “இதோ, கர்த் தருக்குப் பயப்படுகிற மனு~ன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.” “ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடி ருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” “மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரி யிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்” பிரியமானவர்களே, மேற்குறிப்பிடப்பட்ட வாக்கிய ங்களின் கருப்பொருள் என்ன? தேசமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும், சபையாக இருந்தாலும், தனிப்பட்ட மனிதனாக இருந் தாலும், எந்த குழுவைச் சார்ந்தவனாக இருந்தாலும், சர்வ வல்ல மையுள்ள மெய்யான தேவனாகிய கர்த்தரே ஆளுகை செய்கின்றார். அவருடைய அனுக்கிரகம் இல்லாமல் மனிதனுடைய பிரயாசத்தினால் வரும் பலன் ஒன்றுமில்லை. பல மனிதர்கள், பூரண சற்குணராகிய தேவனின், நீடியபொறுமையை அசட்சை செய்து அகங்காரம் கொண் டிருக்கின்றார்கள். அவர்களுக்காக நியாயத்தீர்ப்பின் நாள் வைக்கப்ப ட்டிருக்கின்றது. ஆனால் கர்த்தரை தங்கள் தெய்வமாக கொண்ட மனி தனும், குடும்பமும், குழுக்களும், ஜனமும், தேசமும் பாக்கியமுள்ள வைகள். நித்திய மகிழ்ச்சி அவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்றது.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்மால் அன்றி நான் ஒன்றும் செய்ய முடியாது, நீரே கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதிக்கின்றவர் என்ற உண்மையை உணர்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 12:19-22

Category Tags: