புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 11, 2018)

விசுவாசித்து நடப்பவர்கள்...

2 கொரிந்தியர் 5:6

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.


இயேசுவின் சீஷனாகிய தோமா, சுமார் மூன்றரை வருடங்களாக இயேசுவுக்கு பின்சென்று, அவருடைய உபதேசங்களை நேரடியாக கேட்டிருந்தான். இயேசு செய்த அற்புதங்களையும் தன் கண்ணாரக் கண்டிருந்தான். எனினும் இயேசு மரணத்தை ஜெயித்து, உயிர்தெழு ந்தார் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்ட போது, அதை விசுவாசிப்ப தற்கு ஆதாரங்களை தேடினான். இயேசுவை நான் என் கண்களால் கண்டு, அவரை என் விரல்களால் தொட்டால் ஒழிய நான் இதை நம்ப மாட்டேன் என கூறினான். அவன் இயேசுவைக் கண்ட போது, அவரு டைய உயிர்தெழுதல் உண்மை என ஏற்றுக் கொண்டான். இயேசு அவ னைப் பார்த்து: கண்டு விசுவாசிப்பவர் களை விட காணாமல் விசுவாசிப்பவர் கள் பாக்கியவான்கள் என்று கூறினார். இன்றைய உலகிலும் மனிதர்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு விஞ்ஞான ஆதாரங்களை தேடுகின்றார்கள். வேதாகமத்திலே குறிப்பி டப்பட்டிருக்கும் ஒரு சம்பவம் அல்லது ஒரு இடத்தைக் குறித்து, விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்கின்றார்கள் என்று கூறும்போது, சில மனிதர்கள் பெருமிதம் அடைகின்றார்கள். அந்த ஆய்வின் முடிவு கிறிஸ்தவத்திற்கு நல்லது என்று சில கிறிஸ்தவர்கள் கூட எண்ணிக் கொள்கின்றார்கள். அப்படியாக அல்ல! அந்த ஆய் வின் முடிவு ஒரு வேளை இந்த உலக ஞானத்தை தேடும் மனிதர்க ளுக்கும், விஞ்ஞானத்திற்கும் நல்லது. இயேசு கிறிஸ்து மெய்யான தேவன், மனித குலத்தின் பாவங்களை பரிகாரம் செய்ய தன்னை பலியாக கொடுத்தார், பாவத்தை பரிகரித்து, மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார், அவரை “விசுவாசிப்பவர்களுக்கு” இரட்சிப்பை கொடுத்து, பரலோகம் செல்லும் வழியில் நடத்துகின்றார். இவை யாவும் தேவனுடைய ஏற்பாடுகள். அதை மனிதர்கள் தர்க்கிக்கலாம். அந்த தர்க்கம் தர்க்கிப்பவர்களுக்கு மரணக் கண்ணியாகும். விசுவாசிக்கிறவர்களோ தேவ மகிமையைக் காண்பார்கள். விசுவாச மில்லாமல் தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழமுடியாது. தேவனு டைய வார்த்தைகள் ஜீவனுள்ளவைகள், அவைகளை விசுவாசித்து, அதன்படி நடவுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய வார்த்தைகளை விசுவாசிப்பத ற்கு நான் ஆதாரங்களை தேடாமல், உம்முடைய வார்த்தைகளை விசுவாசித்து அதன்படி வாழ என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 1:18-31

Category Tags: