புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 10, 2018)

தளர்ந்து போய்விடாதே!

பிரசங்கி 8:11

துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத் திரரின் இருதயம் பொல் லாப்பைச் செய்ய அவர்க ளுக்குள்ளே துணிகரங் கொண்டிருக்கிறது.


இந்த பூமியிலே பல மனிதர்களை ஒடுக்கி, வறியோரை கடினமாக நடத்தி, பொல்லாத வழிகளை தெரிந்து கொண்டு வாழ்ந்த மனிதர்கள், சாதாரணமாக வாழ்ந்த மற்றய மனிதர்களை போல மரணமடை ந்திருக்கின்றார்கள். அவர்கள் வாழ்வை உற்று நோக்கிய அடுத்த தலைமுறையினர், அவர்களின் வாழ்க்கையை பாருங்கள், இருக்க மட்டும் உல்லாசமாக இருந்தானே? அவர்களுக்கு முன்பாக யார் நிற்ற முடிந்தது? அவர்களுக்கு யார் நீயாந் தீர்க்க முயன்றார்கள் என்று சொல்லி, தாங்களும் துணிகரமாக பொல்லாத வழிகளை தெரிந்து கொள்கின்றார்கள். ஆனால், மரித்தோருக்கும், உயிரோடிருப்பவர்களுக்கும் நியாயத்தீர்ப்பு செய்யும் சர்வ வல்லவர், தம்முடைய நாளுக்காக பொறுமையாக இருக்கின்றார் என்பதை அவர்கள் உணராதிருக்கின்றார்கள். பாவி நூறுதரம் பொல்லா ப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். அதாவது, இந்த பூமியுடன் மனிதர்களின் கணக்கு முடிவதில்லை. தேவனுக்கு அஞ்சி அவர் வழியிலே நடப்பவர்கள் நீடித்த நாட்களாக கர்த்தருடைய வீட்டிலே நிலைத்திருப்பார்கள். துணிகரமாக தங்கள் துன்மார்க்கத்திலே வாழ் ந்தவர்கள் அக்கினியும் கந்தகமுமான அக்கினிக் கடலிலே பங்கடை வார்கள். இந்த அறிவு, அவர்களுக்கு இப்போது அற்பமாக தோன் றும். ஆனால், தேவனுடைய பிள்ளையாகிய நீ, துன்மார்க்கரின் வாழ் வைக் கண்டு, உன் நற்கிரியைகளைவிட்டு ஓய்ந்து போகாதே, துன்மார்கர் இந்த உலகத்திலே, ராஜ ஸ்தானத்திலும், கடற் கோட்டை கட்டி, அதன் மத்தியிலும் பாதுகாப்பாய் வாழ்ந்திருக்கின்றோம் என்று எண்ணினாலும், அவர்களின் செய்கைகளுக்கு தக்க பின்விளைவுகளை அடைந்தே தீர்வார்கள். நீயோ, தேவனால் அழைக்கப்பட்டவனே(ளே), எங்களை மீட்கும்படி, தம்மை தியாகமாக சிலுவையில் ஒப்புக்கொ டுக்க, மானிடனாய் தோன்றிய, இயேசுவின் வாழ்க்கையின் மேல் உன் கண்களை பதியவை. நிச்சயமாகவே முடிவு உண்டு.

ஜெபம்:

என் நேசத் தகப்பனே, துணிகரமான வாழ்க்கை வாழ்பவர்கள் மேல் என் கண்களை பதியவைக்காமல், இயேசு சென்ற பாதையிலே செல்லும்படியாய் எனக்கு கற்றுத்தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 23:18

Category Tags: