புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 09, 2018)

இயேசு எப்படிப்பட்டவரோ!

லூக்கா 19:3

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்


ரோம அரசாங்கத்திற்கு வரி சேகரிப்பவர்களுக்கு தலைவனும், பாவி யும் அநீதியுள்ளவன் என்று சமுதாயத்தினால் கருதப்பட்ட சகேயு என் னப்பட்ட ஒரு மனு~ன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகை தேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்ட த்தில் அவரைக் காணக்கூடாமல், வெட்கத்தை ஒரு பொருட்டென்றெ ண்ணாமல், இயேசு போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அருகில் வந்து, அவனுடைய பெயரை சொல்லிக் கூப்பிட்டு, சகே யுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங் கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். ஜனங்களோ அதைக் கண்டு, பாவியான மனுஷனிடத்தில் இவர் தங்கும்படி போகின்றாரே என்று முறுமுறுத்தார்கள். அவன் பாவியான மனுஷனும் அநியாயமாக பணம் சம்பாதித்தான் என்பதும் உண்மை. ஆனால், இயேசு ஒரு வீட்டிற்கு காரணமில்லாமல் செல்லமாட்டார். பாவத்தில் நிறைந்திருந்த மனிதனு டைய உள்ளத்திலே, “இயேசு எப்படிப்பட்டவரோ” என்ற ஏக்கம் இரு ந்தது. தான் வாழ்வடைய வேண்டும் என்ற வாஞ்சை அவன் உள்ளத் தில் இருந்ததால், அவன், கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ் திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத் தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனை யாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இன்றைக்கு இந்த வீட்டு க்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கி றானே என்றார். பாவி என்று ஒரு மனிதனையும் தள்ளிவிடாமல், பாவ த்திலே வாழும் மனிதர்களை பரலோகம் சென்றடையும்படியாய் ஆவ லாய் அழைக்கின்றவர். எங்கள் இயேசு பரலோகம் செல்லும் பாதையை காட்டி, அதன் வழியில் நடத்துகின்றவர். சகேயு பாவியாக இருந்தான் ஆனால் அவன் உள்ளத்தில் இயேசு வந்தபின் அவன் இனிப் பாவியல்ல. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே இயேசு வந்திருக்கிறார்.

ஜெபம்:

எங்களை நேசிக்கின்ற பரலோக தந்தையே, உம்முடைய குமாரன் வழியாக, அன்பு என்றால் என்ன என்று கற்றுத் தந்தீர். என் பாவங்களை நீக்கி புதுவாழ்வு தந்தவரே, தொடர்ந்தும் என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 5:31

Category Tags: