புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 08, 2018)

ஞானிகளின் கடிந்து கொள்ளுதல்

பிரசங்கி 7:5

ஒருவன் மூடரின் பாட்டைக்கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.


நாகரீகம் என்று போன்றவையிலே மனிதர்கள், தங்களுக்கென்று உலகத்திலே பிரபல்யமான பல ஸ்தாபனங்களை அமைத்து, அந்த ஸ்தாபனங்கள் வழியாக, மனிதர்களுடைய இருதயத்திற்கு பிரியமான உலக பாடல்களை எழுதி, இசையமைத்து பாடுகின்றார்கள். அவை கள் திரைப்படங்களிலும் ஒலிக்கின்றது. அந்த பாடல்களின் கடைத்தொகை (கருப்பொருள்) என்ன? ஒன்றுமில்லை! இந்த மனி தர்களும் ஸ்தாபனங்களும் தேவனுக்கு விரோதமான காரியங்களை பெருமை யாக பேசுகின்றவர்கள். தன் செல்வங் களை பெருக்கும்படியாக, மனிதர்களு டைய ஆசை இச்சைகளை தூண்டி விடுகின்றார்கள். மனிதனுடைய ஆத்து மா தெய்வீக கானங்களால் பூரிப்ப டையும். ஆனால், இவர்களோ, இந்த உலக போக்கின் பாடல்களை பாடி மனிதர்களின் ஆத்துமாக்களை மடங்கடிக்கின்றார்கள். தேவனுடைய சத்தத்தை கேட்கமுடியாதபடிக்கு சிறு பிராயத்திலிருந்தே பிள்ளைகள் மனதில் மதியீனத்தை ஒட்டிக் கொள்ள வைக்கின்றார்கள். இவர்கள் காரியமறியாத மூடர்கள். இவர்கள் தங்கள் பிழைப்புக்காக, தேவன் ஆகாதது என்று தள்ளியவைகளை, தேவனுடையவைகள் என்று துணிகரமாக பேசிக் கொள்வார்கள். இப்படியாக மதியீனமானவர்க ளின் பாடல்களை கேட்பதைப் பார்கிலும், தேவனுக்கு பயந்து அவர் வழியில் நடக்கும் ஞானவானின் கடிந்து கொள்ளுதலை கேட்பதே மனிதர்களுக்கு நலம். பிரியமானவர்களே, நீங்கள் சற்று, தரித்திருந்து சிந்தியுங்கள். உங்கள் இருதயத்திற்குள் இதமாக இருக்கும் பாடல்கள் எவை? தேவனைப் போற்றும் தெய்வீக கானங்களா? இல்லை இந்த உலகிலே ஒலிக்கும் உலகப் பாடல்களா? உங்கள் பொக்கி~ம் எங் கேயோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். காலம் சென்றபின் துக்கப்படாமல், இப்பொழுதே தேவனைத் துதிக்கும் கானங்களையே வாஞ்சித்து, அவைகளிலேயே கேட்பதற்கு உங்கள் செவிளை திறந்து கொள்ளுங்கள். தேவனுக்கு பயந்து நடக்கின்றவர்களும், இந்த உலக பார்வையிலே பிரபல்யமற்றுமிருக்கின்ற நீதிமான்களின் வாயினாலும் பேசப்படும் தேவ வார்த்தைகளை கேளுங்கள். அவ்வார்த்தைகளிலே நித்திய ஜீவன் உண்டு.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, இந்த உலகிலே பிரபல்யமாக தோன்றும் உலக பாடல்களால் எங்கள் ஆத்துமாவை தொய்யப் பண்ணாமல், உம்முடைய வார்த்தைகளால் எங்கள் மனக்கண்களை பிரகாசமடையச் செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 40:3

Category Tags: