புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 07, 2018)

சகலமும் ஆள்பவர்

1 சாமுவேல் 2:8

பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.


கர்த்தர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பை யிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்;. பூமியும் அதன் நிறைவும், அதன் குடிகளும் கர்த்தருடையது. மனிதர்கள் இந்த உலகில் தங்கள் பார்வைக்கு இன்பமானவைகளை தேடுகின்றார்கள். ஏவாளை பிசாசானவன் சோதித்த போது, ஏவாளானவள் தேவனால் விலக்கப்பட்ட கனிகளை உற்றுப் பார்த்தாள், அது அவள் பார்வைக்கு இன்பமாயிருந்தது, அதன் முடிவு, சந்ததி சந்ததியாக மனிதர்கள் பாவ த்திற்குள்ளானார்கள். ஆபிராகமுடன் சென்ற அவனுடைய சகோதரனின் மக னாகிய லோத், தான் குடியிருக்கும்படி ஒரு பட்டணத்தை தெரிந்து கொண்ட போது, நீர்வளம் பொருந்தினதாயிரு கிற இடத்திலே சோதோமுக்கு முன் பாக தன் கூடாரத்தை போட்டான். தன் பார்வைக்கு பசுமையானதை தெரிந்து கொண்டான். அதன் முடிவு அழிவாக இருந்தது. இவர்கள் சகலமும் படைந்த சர்வ வல்லவரின் கரங்களை நோக்கிப் பார்க்காமல், தங்கள் இருதயத்திற்கு இதமானதை உற்று நோக்கினார்கள். கர்த்தர், உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ள த்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண் ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்கிறவர். தன் குமா ரனாகிய யோனதானுக்கு சேர வேண்டிய ராஜ்யத்தை பாதுகாக்கும் படி, தாவீது என்னும் இடையனை கொன்றுபோடும்படி சவுல் ராஜா பெரும் முயற்சி எடுத்து வந்தான். ஆனால், ஆடுகளை மேய்த்துவந்த தாவீது என்னும் இளைஞனை தேவன் பாதுகாத்தார். முடிவிலே, சவு லும் அவன் குடும்பமும் அழிந்து போனார்கள். தாவீதும் அவன் சந்த தியும், நிலையான வீட்டை நித்தியமாக பெற்றுக் கொண்டார்கள். எனவே நீங்கள் இப்போது காணும் சூழ்நிலைகளை கண்டு தயக்க மடையாமல், சூழ்நிலைகளை, பனியைப் போல மறையச் செய்யும் சர்வவல்லவரை நோக்கிப் பாருங்கள். மனிதனுடைய வாய் பெரும்பே ச்சுக்களை வீணாய்ப் பேசும், ஆனால் தேவன் உரைத்த வாக்கு ஒரு போதும் மாறாதது. அவர் சர்வத்தையும் ஆளும் சர்வ வல்லமையு ள்ளவர்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்தில் முதன்மையாக தோன்றும் தேசங்களையும், மனிதர்களையும் இடங்களையும் பொருட்களையும் நோக்காமல், உம்மை நோக்கி பார்த்து பிரகாசமடைய என்னை நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 136:6

Category Tags: