புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 06, 2018)

வாழ்க்கையின் தீர்மானங்கள்

சங்கீதம் 1:3

தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.


கனடாவிலுள்ள ஒரு பட்டணத்திலே கம்யூட்டர் நிரலர் ஆக வேலை பார்த்து வந்த ஒரு மனிதன், அமெரிக்காவிலுள்ள குறிப்பிட்ட பட்ட ணத்தில் இன்னும் அதிக சம்பளத்துடன் வந்த வேலை வாய்ப்பை ஏற்றுக் கொண்டு உடனடியாக அமெரிக்காவிற்கு சென்றுவிட்டான். அவனுடைய தீர்மானத்தின் முதன்மையானதும், முழுமையானதுமான காரணி பணம். இருக்கும் தேசத்தில் என்ன நன்மைகள் இருக்கின்றது என் பதை அவன் சற்றும் சிந்திக்கவில்லை. செல்லும் ஆலயம், குடும்ப அங்கத்த வர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்களின் விவகாரங்களையும், தான் முன்னெடுத்துச் செல்லும் மற்றய பொறுப்புக்களையும் ஒரு பொருட்டு என்று எண்ணாமல், தான் அறியாத புதிய பட்டணத்திற்கு தீவிரித்தான். அங்கே என்ன தீமைகள் காத்திருக்கி ன்றது என்று கூட அவன் ஆராயவி ல்லை. அவன் கண்முன் இருந்ததெ ல்லாம், இந்த உலகத்தில் பசுமைiயாக தோன்றும் ஐசுவரியம். இன்றைய உலகிலே வாழும் மனிதர்களின் மனநிலை, நானும், என்னுடையவைகளும், எனக்குரியதும் என்று மிகவும் சுயநலமாகவே வாழ்கின்றார்கள். தங்களுடைய வாழ்க்கையிலே தேவன் என்ன திட்டத்தை வைத்திருக்கின்றார், இந்த உலக வாழ்க்கை கானல் நீர் போல் களைந்து போய்விடும் என்பதை உணராமல், இந்த உலகத் தோடு அழிந்து போகும் அற்பமான பொக்கி~த்திலேயே கண்களை பதித்து வைத்திருக்கின்றார்கள். எங்கள் வாழ்க்கையிலே, எந்த தீர்மானங்களையும் எடுக்கும் முன்பதாக, நாங்கள் பொறுமையுடன் ஜெபிக்க வேண்டும். தேவனுக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கும் மனிதர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும். நாங்கள் கர்த்தரு டைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானித்து, அதன்படி தீர்மானங்களை எடுக்கும் போது, எங்கள் வாழ்க்கை நற்கனி கொடுக்கும் நல்ல மரங்களைப் போல எப்போதும் செழித்திருக்கும். நாங்கள் கையிட்டு செய்யும் எல்லாக் காரியங்களையும் தேவன் வாய்கச் செய்வார்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, காலங்கள் உம்முடைய கரங்களில் இருக்கின்றது என்பதை உணர்ந்து, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் என் தீர்மானங்களை எடுக்க என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:24-27

Category Tags: