புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 05, 2018)

உன்னதமானவரின் மன்னிப்பு…

1 பேதுரு 4:4

அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடே கூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.


நாட்டின் சட்டத்திற்கு விரோதமாக குற்றம் செய்து, நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று தீர்க்கப்பட்டு, சிறைத் தண்டனையை நிறை வேற்றிவருவோரின் நிலையை ஆராய்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டம் சில நாடுகளில் நடைமுறையில் இரு க்கின்றது. ஆனாலும், சமுதாயத்திலுள்ள சிலர், அப்படி மன்னிப்பு பெற்றவர்களின் முன்னய நிலையைப் பற்றி தூற்றித் திரிவதுண்டு. அவர்கள் எப்படித் தூற்றித் திரிந்தாலும், அவ்வ ண்ணமாக மன்னிப்பு பெற்றவர்களின் குற்றங்கள் இனி பொலிசாரினாலோ அல்லது நீதி மன்றத்தினாலோ எண்ண ப்படுவதில்லை. இதற்கு ஒத்ததாகவே, சகலவற்றையும் சிரு~;டித்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், எங்கள் பாவங்களை மன்னித்திருக்கின் றார். பாவங்களை மன்னித்து, புதிய வாழ்வை தந்திருக்கின்றார். மன்னி ப்பை பெற்ற நாம், மனதார அவரை பின்பற்றி செல்லும் போது, எங்கள் பழைய வாழ்க்கையின் சம்பவங்களை பற்றி சிலர் ஆங் காங்கே அவதூறு பேசித் திரியலாம். ஒருவேளை அவை உண்மை யாக இருந்தாலும், தேவனுடைய கணக்கில் அவைகள் எண்ணப்படு வதில்லை. எல்லாத் துரைத்தனத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவ த்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா அதிகாரத்திற்கும் மேலானவர் எங்களுக்கு மன்னிப்பு அரு ளியிருக்க, நாம் எங்கள் பழைய சுபாவங்களை களைந்து, தேவன் காட்டிய வழியில் நடக்கும் போது, மற்றவர்களின் விமர்சனங்களினால் இடறல் அடையக்கூடாது. சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் தேவனை அறியாதவர்களுடைய இ~;டத்தின்படி நடந்துகொண்டு, பல விதமாக துர் இச்சைகளையும் களியாட்டுக்களையும், அருவருப்பான விக்கிரகாராதனையையும் செய்து வந்தபோது, அவைகளை மனதார ஏற்றுக் கொண்ட மனிதர்கள், இப்போது நாங்கள் அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடே கூட விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, எங்களைத் தூ~pக்கிறார்கள். எனவே நாங்கள் இழிவான பேச்சினால் இழுப்புண்டு போகாமல், கர்த்தர் மேல் எங்கள் கண்களை பதிய வைப்போம்.

ஜெபம்:

பரலோக தந்தையே, நீர் எங்கள் பாவங்களை தயவாய் மன்னித்ததற்காய் நன்றி. மற்றவர்கள் பேசும் விமர்சனப்பேச்சாகிய கண்ணியில் நாங்கள் மறுபடியும் அகப்படாதபடி எங்களைக் காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:12-16

Category Tags: