புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 04, 2018)

புதிய அத்தியாயம்!

யோவான் 8:12

இயேசு ஜனங்களை நோ க்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிற வன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.


மனித குலத்தின் மீட்பராகிய இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் இந்த மாதத்திலே, இயேசு இந்த உலகத்திலே இருந்த போது, அவரை சந்தித்தவர்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்ப்போம். ஒரு சமயம், விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேத பாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப் படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியா யப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையி ட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லு கிறீர் என்றார்கள். உங்களில் பாவமில் லாதவன் இவள்மேல் முதலாவது கல் லெறியக்கடவன், என்று கூறினார்;. அவ ர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சா ட்சியினால் கடிந்துகொள்ளப் பட்டு, பெரியோர் முதல் சிறியோர்வரை க்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டா ர்கள். இயேசு அவளை நோக்கி: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். அப்போது பாவமில்லாத பரி சுத்தராகிய இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என் றார். ஆகாதவள் என்று தள்ளப்பட்ட அந்த ஸ்திரி, அவளுடைய கொடூ ரமான பாவ செயலிலே அகப்பட்டிருந்தாள். அவமானமான நிலை! ஊரார் சூழ்ந்து நிற்கின்றார்கள். இந்த நிலையிலே அவள் இயேசுவை சந்தித்தாள். தயாபரராகிய இயேசு அவளுடைய வாழ்விலே ஒரு புதிய அத்தியாயத்தை திறந்தார். குற்றம் செய்து அவமானமடை யும்போது மனிதர்கள் பலவிதமாக பேசலாம். ஆனால், வாழ்வடையு ம்படி தம்மண்டை வந்தவர்களை நேசிக்கின்ற தெய்வம் இயேசு, வாழ்வின் பாவ இருளை அகற்றி, தெய்வீக ஒளியை அவர்கள் உள்ளத்தில் வீசச் செய்கின்றார். மறுவாழ்வு தரும் நேசர் இயேசு அண்டை கிட்டிச் சேருங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, மனந்திரும்பி உம்மிடம் சேருகின்றவர்களை நீர் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை. உம்முடைய அன்பின் ஆழத்தை உணர்ந்து தூய வாழ்வு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:37

Category Tags: