புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 03, 2018)

தேவனையே சார்ந்திருப்போம்...

தானியேல் 4:35

அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கி றீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை


பராக்கிரமமுள்ள ராஜா ஒருவன் யுத்தத்திற்கு புறப்பட்டுச் சென்றான். யுத்தமுனையில், முன்குறித்த யுக்திகளை கையாண்டு, அந்த யுத் தத்தில் பலத்த வெற்றி பெற்றான். தன்னுடைய வெற்றியைக் குறித்து அவன் மகிழ்ச்சியடைந்தான். சில மாதங்களுக்கு பின், இன்னுமொரு நாட்டிற்கு எதிராக யுத்தம் செய்ய புறப்பட்டான். இந்த நாட்டின் படை ப்பலம், முன்பு யுத்தம் செய்த நாட் டின் படைப்பலத்திற்கு ஒத்ததாகவே இருந்துது. முன்பு இருந்த பெலன் அவனுக்கு இன்னுமுண்டு. முன்பு இரு ந்ததைவிட அதிக படைப்பலம் அவனு க்கிருந்தது. முன்பு கையாண்ட யுக்திக ளையே கையாண்டு யுத்தத்தை நடத் தினான். ஆனால் யுத்தத்திலே தோல்வி அடைந்து திரும்பினான். சற்று எங்கள் வாழ்க்கையின் விவகாரங்களை இந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார் ப்போம். எங்கள் நாளாந்த வாழ்க்கை யிலே, வேலைத் தளத்திலும், படிக் கும் இடங்களிலும், பல விதமான சவா ல்களை நாங்கள் எதிர் நோக்குகின் றோம். ஒரு தடவை அமோக வெற்றிபெற்ற விடயத்தை, மறுபடியும் இலகுவாக செய்து விடுவேன் என்று முன்னெடுத்து செல்லும் போது, எதிர்பாராத தோல்விகளை சந்திக்கின்றோம். ஏன்? வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் எங்கள் சுய பெலத்தில் இல்லை. நாங்கள் கையாளும் யுக்திகளில் இல்லை. எங்களுக்கு உதவும் மனிதர்களிடம் இல்லை. எங்களை எதிர்க்கும் மனிதர்களிடத்திலும் இல்லை. சகலமும் படைத்த சர்வ வல்லவராகிய தேவனாகிய கர்த்தராலே அது நிச்சயி க்கப்படுகின்றது. ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்த த்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது. பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது. ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமா ன்களின் புத்தியும் போதாது. தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது. அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிட வேண்டும். எனவே எப்போதும் நாங்கள் தேவனையே சார்ந்து ஜீவிக்க வேண்டும்.

ஜெபம்:

பராக்கிரமுள்ள தேவனே, என் சுயபலத்திலும், அனுபவத்திலும் காரியம் வாய்கும் என்ற எண்ணத்தை களைந்துவிட்டு, உம்மையே நம்பி உம்முடைய அனுக்கிரகத்திற்கு காத்திருக்கும் இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 9:11

Category Tags: