புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 02, 2018)

திருப்தியாக்கி நடத்துவார்...

யோவான் 14:6

இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயி ருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.


மனிதர்கள், தங்கள் வாழ்க்கையின் முடிவில் இளைத்துப் போனவர்களாய், என்னடா வாழ்க்கை என்று கூறுவதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். சூரியனுக்குக் கீழே மஷனுன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களை யெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனது க்குச் சஞ்சலமுமாயிருக்கிறது என்று பிரசங்கி (சாலமோன்) கூறியிருக்கின்றார். வாழ்நாள் குறுகிய மனிதன் தன் வாழ்க்கையின் நாட்களிலே, சத்திய த்தை (உண்மையை) அறியும்படி பல முயற்சிகளை எடுக்கின்றான். சரியான பாதையை கண்டுபிடிக்கும்படி கடுமை யாக உழைக்கின்றான். முடிவில்லாத நிம்மதியான வாழ்வை காணும்படி, பல பிராயச்சித்தங்களை செய்கின்றார்கள். இவையெல்லாம் புதியவைகள் அல்ல. இந்த பூமியில் ஒரு சந்ததி தோன்றி இவைகளை அடையும்படி நாடுகின்றது. அந்த சந்ததியின் நாட்கள் முடிந்தவுடன், இன்னுமொரு சந்ததி தோன்றி, அதே பிரகாரமாக செய் கின்றது. இவையெல்லாம் மாயை. மனுஷனுடைய பிரயாசங்கள் யாவும் விருதா. அவன் வாழ்நாள் குறைந்தவனும், சஞ்சலம் நிறைந் தவனுமாயிருக்கின்றான். மனிதனுடைய வாழ்வின் கருப்பொருளை அறியும்படியாய் தன்னிடத்தில் வரும்படியாக இயேசு கிறிஸ்து அழை க்கின்றார். “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கின்றேன்” என்று இயேசு கூறியிருக்கின்றார். வாழ்க்கையிலே நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நீடித்த பலனுள்ளதாய், இந்த உலகத்தைவிட்டு நீங்கள் கடந்து செல்லும் போது திருப்தியுடன் கடந்து செல்ல வேண்டுமாயின், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுங்கள். அப்பொழுது இந்த பூமியிலே நீங்கள் வாழும் வாழ்க் கையின் நோக்கத்தை உணர்ந்து கொள்வீர்கள். தேவையானதும், நிலையானதுமான பொக்கிஷம் என்ன என்பதை உணர்ந்து அதைப் பின்தொடர்வீர்கள்.

ஜெபம்:

உன்னத தேவனே, இந்த உலகிலே வாழும் நாட்களில் விருதாவாய் காரியங்களை செய்யாமல், வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து, உம்முடைய வார்த்தையின்படி வாழ என்னை நடத்திச் செல்வீராக! இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:16-19