புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 01, 2018)

நிம்மதி உண்டு!

ஏசாயா 26:3

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதை யுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால்> நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்து க்கொள்வீர்.


நாள்பட்டதும் மாற்ற முடியாததுமான புண்களைப் போல, மனதிலே ஏற்றப்பட்ட காயங்களுக்கு இனி விடுதலை இல்லை என்ற விரக்தி பல மனிதர்களை வாட்டுகின்றது. எப்படி நடந்து முடிந்ததை மாற்ற முடியும்? என்னை வாட்டும் அடிமைத்தன கட்டுக்களிலிருந்து எப்படி விடுதலை அடைவது? இப்படிப்பட்ட நோவுகள் இன, மத, தராதர ஏற்றத் தாழ்வுகள் இன்றி மனிதர்களை தாக்கும் நோவுகள், வாழ்க் கையின் நிம்மதியை முற்றிலும் கெடு த்துப் போடுகின்றது. அதாவது மாளி கையில் வாழ்ந்தாலும், குடிசையில் வாழ் ந்தாலும், அதிகாரமுள்ளவர்களாக இரு ந்தாலும், ஒடுக்கப்பட்டவர்களாக இருந் தாலும், மனிதர்களுடைய வாழ்க்கை யிலே, நிம்மதி குலைக்கப்படுகின்றது. இந்த உலகிலே நிம்மதி அடையும் வழி முறைகளை பலர் கற்றுக் கொடுக்கின் றார்கள். எடுத்துக்காட்டாக, நிம்மதியை அடைவதற்கு, இந்த ஏழு படிகளை முறைப்படி தாண்டிச் செல்ல வேண் டும் அல்லது இப்படிப்பட்ட தேக அப் பியாசமும் தியானமும் செய்வதால் நிம்மதியை அடையலாம் என பல மனிதர்கள் இன்று முயற்சிக்கின்றார்கள். உலகில் இல்லாத காரியம் ஒன்றை உலகிலுள்ளவர்கள் எப்படி பெற்றுத் தரமுடியும்? மனிதனால் எடுக்கப்படும் எந்த முயற்சிகளும், அவன் ஆத்துமா விரும்பும் நிம்ம தியை கொடுப்பதில்லை. அப்படியானால் அதை எப்படிப் பெற்றுக் கொள்வது? இந்த உலகம் தரக்கூடாத சமாதானத்தை நான் உங்க ளுக்கு தருகின்றேன் என்று பரலோகத்திலிருந்து இறங்கி வந்த இயேசு கிறிஸ்து உங்களுக்கு கூறுகின்றார். அதற்காகவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவருடைய பிறப்பின் நாளை நினைவு கூரும் இந்த மாதத்திலே, பெற்ற நிம்மதியை தொலைத்திருந்தாலும், இயேசுவை அறியாமல் வாழ்ந்திருந்தாலும், இன்று உங்கள் வாழ்வை அவரிடம் கொடுங்கள். உங்கள் இருதயத்தில் சமாதானக் காரணராகிய இயேசு வாசம் பண்ணும்படியாய் இடங் கொடுங்கள். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; என்று கூறிய இயேசு உங்கள் நிலையை நன்றாக அறிந்தவராக இருக்கின்றார்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, இந்த உலகம் தரமுடியாத சமாதானத்தை எங் களுக்கு நீர் தருவேனென்று வாக்களித்தீர். அதை பெற்றுக் கொள்ளும்ப டியாய் என் வழிகளை உமக்கு ஒப்புவித்து உம்முடைய வழியில் நடக்க உதவி செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:16-19