புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 29, 2018)

இயேசுவின் அடிச்சுவடுகள்…

யோவான் 4:34

நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.


தந்தையாருக்கு வேலை அதிகமாக இருந்ததால், தன் வங்கி கணக்கை குறித்த சில கணக்கலுவல்களை கவனித்துவரும்படியாய் தன் மகனை ஊரிலுள்ள வங்கிக்கு அனுப்பினார். வங்கிக்கு சென்ற மகன், வரிசையில் சேவைக்காக நிற்கும் போது, அங்கு வந்த இன்னுமொரு வாடிக்கையாளர், முறைமாறி முன்னே சென்றதால், அவருடன் வாக்குவாதம் செய்ய ஆர ம்பித்தான், வாக்குவாதம் பெருத்த தால், வங்கி முகாமையாளர், அவ்வி டத்திற்கு வந்தார். தன் கோபத்தை அடக்க முடியாமல், வங்கியின் முகா மையாளருடனும் மிகவும் கடினமாக பேசினான், இவனால், வங்கியில் கலக முண்டாக போகின்றது என அறிந்த முகாமையாளர், வங்கியின் பாதுகா ப்பிற்காக, வங்கி பாதுகாவர்கள் மூல மாக பலவந்தமாக வெளியேற்றபட்டு வீடு திரும்பினார். வங்கியில் முறை மாறி குறுக்கிட்ட வாடிக்கையாளர் செய்தது தவறான காரியம். ஆனால் தன் தகப்பனின் வேலையைப் பார்க்க சென்ற மகன், தன் சுய கௌரவத்தை, தந்தையின் வேலை யைவிட அதிகமாக நினைத்ததால், தந்தை கூறியதை நிறைவேற்ற முடியாதவனாய் வீடு திரும்பினான். நீதி நியாயம் அருகிக்கொண்டு செல்லும் இந்த உலகத்திலே, பிதாவாகிய தேவனால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி உண்டு. அந்த பணியை நிறைவேற்றி முடிப் பதற்கு இந்த உலகில் பல சவால்களை சந்திக்க நேரிடும். அவை களில் பல அவமானங்கள், கனவீனங்கள் ஏற்படலாம். அந்த வேளை களில் நாங்கள் எங்கள் சுய கௌரவத்தை மேன்மைப் படுத்தினால், தேவனுடைய சித்தத்தை எங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற முடி யாது. இயேசு சொன்னார்: நான் என்னை அனுப்பின பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடி ப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. அவமானங்களும் நிந்தை களும் அவரை நோக்கி வந்தபோதும், அவை யாவற்றின் மத்தியிலும், தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்தார். நிந்தைகள் அவமா னங்கள், ஏமாற்றங்கள் எங்கள் வாழ்க்கையில் வரும் போது, இயேசு வின் அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள்.

ஜெபம்:

பரலோக தந்தையே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றி, உம் சித்தத்தை செய்து முடிப்பதே என் வாழ்வின் நோக்கமாக இருக்கும்படிக்காய் என்னை பெலப்படுத்தி வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:2-3