புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 24, 2018)

நிகரில்லாத தேவன்

யோபு 13:9

மனுஷனைப் பரியாசம் பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?


யோபு என்ற பக்தன், பல பாடுகளின் பாதையிலே சென்று கொண் டிருந்தபோது, அவரது நண்பர்கள் அவருடைய துன்பமான வேளை யிலே, அவருடைய உண்மை நிலையை அறிந்து கொள்ளவுமில்லை, அவருக்கு, ஆறுதலின் வார்த்தைகளை ஆதரவான வார்த்தைகளை பேசவுமில்லை. அந்த வேளையிலும், யோபு பாவம் செய்யாமலும்;, வீணான வார்த்தைகளைப் பேசாமலும், தன் நண்பர்கள் அறிவடையும்படி தேவ னைப் பற்றிய பல ஆலோசனைகளை அவர்களுக்கு கூறினார். அவர் தன் நண்பர்களை நோக்கி: “மனு~னை பரி யாசம் பண்ணுகிறது போல தேவனை பரியாசம் பண்ணுவீர்களோ?” என்றார். இன்று பல மனிதர்கள், சர்வ வல்ல மையுள்ள, தேவனாகிய கர்த்தரை குறி த்து துணிகரமாக விமர்சிக்கின்றார்கள். தாங்கள் ஞானவான்கள், நன்றாக கற்றவர்கள் என்று ஒரு சாரார் தேவனுடைய மகத்துவங்களை அற்பமாக எண்ணுகின்றார்கள். தங்கள் பாவ இச்சைகளை, தாங்கள் விரும்பியபடி நடத்தி முடிப்பதையே நோக்கமாக கொண்டு வாழும் இன்னுமொரு சாரார் தேவனை பரி யாசம் செய்கின்றார்கள். தேவனை அறிந்த சில மனிதர்களும், சத் தியம் என்ன என்பதை அறிந்திருந்தும், மனிதர்களை திருப்திப்படுத் தும் முகமாக, தேவனுக்கு எதிரான எண்ணங்களை நிறைவேற்றுகின் றார்கள். “மனிதர்கள் தங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாள ங்கள் சாம்பலுக்குச் சரி, அவர்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களு க்குச் சமானம்” என்று வேதத்திலே வாசிக்கின்றோம். தேவனைக் குறித்து துணிகரமான வார்த்தைகளை பேசும் யாவரும், நியாய த்தீர்ப்பு நாளிலே, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நடு நடுங்குவார்கள். இவற்றிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன? எந்த சூழ்நிலையிலும், நிகரில்லாத தேவனின் மகத்துவங்களை பரியாசம் பண்ணக் கூடாது. தேவனை பரியாசம் பண்ணுகிறவர்களுடனும், அவருடைய மகத்துவங்களை அசட்டை செய்கின்றவர்களுடனும் நாங்கள் எவ்வளவேனும் உடன்படக் கூடாது. மற்றவர்களுடைய துன்பமான வேளையிலே, எங்கள் எண்ணத்தில் தோன்றியபடி, தேவ வார்த்தைக்கு எதிரான காரியங்களை பேசக் கூடாது.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய வார்த்தைக்கு முரண்பாடான காரியங்களை சிந்தியாமலும், பேசாமலும் இருக்கவும், எந்த வேளையும் உம்மை சார்ந்து வாழவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:7-8